Posts

Showing posts from January, 2015

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு தீர சித்த வைத்தியம் !

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம். ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும். மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும். 5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும். தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வ

வாழைப் பூ - மருத்தவக் குணங்கள்

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர். பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். . வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. . . முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம். மருத்துவப் பயன்கள்: இரத்தத்தைச் சுத்தப்படுத்த: வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும்