Posts

Showing posts from February, 2017

படர்தாமரை நீங்க பாட்டி வைத்தியம் !

Image
பூஞ்சையினால் ஏற்படக்கூடிய படர்தாமரை எனும் நோய் கோடைக்காலங்களில் தோலில் அதிகமாக ஏற்படுகிறது. இது. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும். பிறப்புறுப்பில் தொடங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும். காரணம் என்ன? ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. சுயச் சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர் களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம். இந்தக் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிரு

நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு - அறிகுறிகள்

Image
நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லாமலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஆண்மைக்குறைவு நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள். நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடம் பழுதடைந்து விடுதல். குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் வழக்கம். காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுதல். இரவில் தேவைக்கும் அதிகமாக உணவை உட்கொள்வது. விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம்.  கீழேயுள்ள அறிகுறிகளைக் கொண்டு நரம்புத் தளர்ச்சியை அறிந்து கொள்ளலாம். அ. தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல். ஆ. விரைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது. இ. விந்து வெளியேறாமலேயே இருப்பது. இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாட