Posts

Showing posts from April, 2018

தீராத தோல் நோய்களுக்கு தீர்வு

Image
தோல் எனும் போர்வை உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரியது தோல். உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல். இதன் பரப்பளவு 2 சதுரமீட்டர். உடல் எடையில் 16 முதல் 20 சதவிகிதம் வரை தோலின் எடை உள்ளது. தோலின் மீது சுமார் 2 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் அமைந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 500 மி.லி. 600 மில்லி வரை வியர்வை சுரக்கிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்கள் 600க்கும் மேல் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தட்பவெப்ப மாறுபாடுகள் வெவ்வேறு கலாச்சாரம், உணவுப் பழக்கம், மாறுபட்ட எத்தனையோ அக, புற அம்சங்கள் மாறுபடுவது போல தோல் நோய்களும் நபருக்கு நபர் இடத்துக்கு இடம் மாறுபட்டுக் காணப்படுகின்றன. உள்ளே வெளியே சாதாரணமாகத் தோலின் புறக்குறிகள் மறைந்தால் போதும் என்று ஆங்கில மருத்துவம் கருதுகிறது. அதனையே வெற்றிகரமாகச் செய்து விடுகிறது. ‘அக்குறிகள் எங்கே சென்றன? என்பதே ஹோமியோபதி எழுப்பும் அர்த்தமுள்ள வினா. உள்முகமாய் அவை திருப்பி விடப்பட்டுள்ளன என்பதே உண்மையான பதில். தோலின் உபாதைகள் (அரிப்பு முதல் சோரியாஸிஸ் எனப்படும் செதில் படை நோய் வரை) உடலின் உள் ஒழுங்கு அமைப்பில