Posts

Showing posts from December, 2016

முகச்சுருக்கம் போக்கும் முட்டைகோசு சாறு

Image
முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதா? கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு கவலையாக இருக்கிறதா? ஐயோ இப்படி ஆகவிட்டதே என அனுதினமும் கவலையடைகிறீர்களா? அதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு மற்றும் நிவாரணிதான் இந்த முட்டை கோஸ். வீட்டிற்கு சமைக்க வாங்கும் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும், இது முகத்தின் சுருகத்தைப் போக்கி இளைமையான, வளமான , பொலிவாக தோற்றத்தைமுகத்திற்கு கொடுக்கிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.  இதை சிறிதளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து, அதனுடன் சிறிதளவு நீர் விட்டு முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிந்த நீரில் முகம் கழுவி வர மிகம் பிரகாசமடையும். முகத்தில் இருக்கும் தோல் சுருக்கம் நீங்கி இளைமையான தோற்றத்தினை அளிக்கும். முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வர, முகச் சுருக்கம் மறையும். சருமம் மென்மையாகும். Muga surukkam maraiya muttaikosu saru

காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்

Image
சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம் சளிக்காய்ச்சல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு வந்தாலும் பாடாய்ப்படுத்தும். சளிக்காய்ச்சசல் இருமலால் அவதியுறும்பொழுது நீங்கள் இந்த இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி பயன் காணலாம். கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும். சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும். த