Posts

Showing posts from May, 2017

பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள்!

வெளிநாட்டில் மட்டுமே இருந்து வந்த பன்றிக்காய்ச்சல் , தற்பொழுது இந்தியாவில் பரவி வருகிறது. பன்றி காய்ச்சல் பாதிக்கு அதிகமானால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆபத்துமிக்க இந்த நோய் ஏன் ஏற்படுகிறது? நோய்க்கான அறிகுறிகள் என்ன? என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? எப்படி அதை தடுப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். பன்றிகாய்ச்சல் பரவும் விதம்  பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தும்மல், இருமல் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தென்படும். காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, இருமல், தலைவலி, உடல் சோர்வு போன்றவை பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: பன்றிக்காய்ச்சல் பல நேரங்களில் சாதாரணமாகவும், சிலநேரங்களில் அதிக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆரம்ப நிலையில் டாமி ப்ளூ மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். தீவிரமான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோய் குணமாகிறது. பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடைவடிக்கைகள்

இதயநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவைகள் !

Image
இதய நோய் தாக்குவதில் வயது வித்தியாசம் எதுவும் இல்லை. ஆண், பெண் என இரு பாலரையும் இந்த நோய் தாக்குகிறது. இதய நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம். நடுத்தர வயதினரை தாக்கிய இதய நோய், தற்பொழுது வயது வித்தியாசம் இல்லாமல் தாக்குகிறது. இதயநோய் - காரணம் இதய நோய் வருவதற்கு காரணம் சீரற்ற இரத்த ஓட்டம். சீரற்ற நிலையில் உயர் இரத்த அழுத்தம் உருவாகும். எனவேதான் ஒவ்வொருவரும் இரத்த அழுத்த அளவை அவ்வப்பொழுது சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்த அளவுகள் பொதுவான ஒரு சராசரி மனிதருக்கு 120/80 மி.மீ பாதரச அளவு இருக்க வேண்டும். அதிகபட்சமாக 130/85 அளவில் இருக்கலாம். இந்த அளவுக்கு குறைந்தாலோ, மீறினாலோ கண்டிப்பாக உணவு கட்டுப்பாடு, உணவு எடுத்துக்கொள்ளுதலில் மாற்றம் செய்தாக வேண்டும். இதயநோய் - காரணிகள்: 1. புகைப்பிடித்தல் 2. புகையிலை பழக்கம் சுவாசத்திற்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. புகைபிடிக்கும்பொழுது வெளியிட்டப்படும் புகையுடன் ஆக்சிஜன் வெளியேறும். இதனால் இரத்த த்தில் கலந்துள்ள ஆக்சிஜன் குறைபடும். அதனை ஈடு செய்ய இதயம் வேகமாக துடிக்கும். எனவே, இதயத்தின் செயல்பாடுள