Posts

Showing posts from March, 2019

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?

நாவில் எச்சில் ஊற வைக்கும் " தக்காளி ஊறுகாய் " செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். சாதாரணமாக செய்யக்கூடிய "ரெசிபி" தானே என நீங்கள் நினைத்தால் அது தவறு. இது ஒரு சிறப்பு வாய்ந்த ஊறுகாய் செய்யும் முறை. இப்படி செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் வீட்டுள்ளவர்கள் இதை விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். குறைந்தளவு உணவு உண்ணும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் கூட , மிக விரும்பி, அதிக உணவினை எடுத்துக்கொள்வார்கள். அந்தளவிற்கு மிகச் சுவைமிக்கதாக இருக்கும். இந்த ஊறுகாய் ரெசிபி .  1) தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நி

இயற்கை முறையில் எளிதாக உடல் எடை குறைக்க

Image
 இயற்கை முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்..? இதோ அதற்கான சில எளிய வழிமுறைகள்!!! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்க, எப்படி உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மூலம் நம் உடல் எடை அதிகரித்ததோ, அதே உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களின் மூலமே அதிகரித்த உடல் எடையைக் குறைக்கலாம். ஆம், எப்போதும் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் இயற்கை வழியை நாடினால், அதன் பலன் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைத்திருக்கும். உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ வழிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வந்தால், உடம்பை எளிதில் குறைக்கலாம். சோம்பு தண்ணீர் தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம். சுரைக்காய் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்ப

குழந்தை வளர்ச்சிக்கு உதவும் உன்னத உணவுகள் !

Image
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் அத்தியாவசியமான 5 உணவுகள். இந்த உணவுகளை கொடுத்தால் உங்களுடைய குழந்தையின் உயரம் கணிசமாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.  குழந்தைகள் பிறந்த சமயம் உள்ள உயரம் முழுவதும் ஜீன் என்ற மரபு கடத்துப்பொருள் மூலமாக பெற்றதே! பிறந்தபின் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மூலம் உடலுக்குத் தேவையான எடை, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை சத்துக்களை பெறுகின்றனர்; ஓரளவு உயரத்தையும் பெறுவர். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது.  அந்த 5 உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். 1. பால் என்றாலே நமக்கு கால்சியத்தின் நினைவு தான் வரும். பாலில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்துவதோடு குழந்தைகளின் உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது. பால் பிடிக்காத குழந்தைகளுக்கு, பாலுடன் பழங்களை கலந்து தர விரும்பி பருகுவர். பாலில் வைட்டமின் எ மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளன. 2. உலர் திராட்சை மற்றும் பருப்புகள் அமினோ அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளன; இவை உடல் திசுக்களை புதுப்பிக்க உதவுகின்றன. மேலும் உலர் திராட்சைகள் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்