Posts

Showing posts from July, 2015

வயிற்றுக் கோளாறுகள் நீக்கும் புதினா

 புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது. புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.