Posts

Showing posts from May, 2018

50 நோய்களுக்கு அற்புத இயற்கை மருத்துவம்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுட

கல்லீரல் நோய் பாதிப்பு கண்டறிய வழிகள்

Image
மனித உடலில் மிக முக்கிய உறுப்பு கல்லீரல். அது உடலுக்கு உள்ளே இருந்து செய்யும் செயல் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு, கல்லீரலுக்கு அதிக வேலை கொடுத்து நாமாகவே கெடுத்துக்கொள்கிறோம். சிக்கலான அமைப்பு கொண்ட நம் உடலில் கல்லீரலின் பங்களிப்பு அபரிதமானது. உடலுக்குத் தேவையான மொத்த சக்தியும் கல்லீரலிடமிருந்துதான் பெறப்படுகிறது. உண்ணும் உணவினை ஜீரணித்து, அதிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து, உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பும் வேலைச் செய்கிறது கல்லீரல். அதோடு இல்லாமல் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்றுகிறது. அளவுக்கு அதிகமான உணவுகளை உண்டு கல்லீரலுக்கு அதன் சக்தியை மீறிய வேலையை கொடுக்கிறோம். அதனால் கல்லீரல் விரைவில் சோர்ந்து போகிறது. நாளடைவில் தாக்கு பிடிக்க முடியாமல் பாதிப்படைய ஆரம்பிக்கிறது. கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு பரம்பரையாக வரலாம். குடும்பத்தில் யாருக்காவது கல்லீரல் பாதிப்பு இருந்தால் அவர்கள் மூலம் வரலாம். கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்: வயிறு உப்புசம். கல்லீரல் பாதிப்பு உள்ளானவர்களுக்கு அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்படும். சிலருக்க

நிபா வைரஸ்: பாதிப்பை தடுப்பது எப்படி?

Image
பன்றிக்காய்ச்சல, பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பயமுறுத்தும் நோய்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தின. அந்த வகையில் தற்பொழுது வௌவால் மூலம் பரவும் வைரசால் காய்ச்சல் பரவி உயிரிழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கோழிக்கோட்டில் வைரஸ் காய்ச்சல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக் காய்ச்சலுக்கு காரணம் நிபா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது. உயிர் பறிக்கும் நோய் பரப்பும் நிபா வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது? பழந்தின்னி வவ்வால்கள் கடிப்பதால் விலங்குகளுக்கு விலங்குகளின் திரவங்கள் மூலம் மற்ற விலங்குகளுக்கு பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்களை உண்ணும் மனிதர்களுக்கு விலங்குகளின் திரவங்கள் மூலம் மனிதர்களுக்கு மனிதர்களின் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கு நிபா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி? விலங்குகள் மற்றும் பறவைகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்ர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது முகமூடி மற்றும் கையுறை அணிய வேண்டும். பழந்தின்னி வவ்வால்கள் அதிகமுள்ள பகுதிகளில் கள் அருந்தக்கூடாது. அடிப்படை ஆரோக