Posts

Showing posts from November, 2018

அடி வயிற்று கொழுப்பை நீக்கும் உணவுகள்

இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக பெரிய தொல்லை இந்த கொலஸ்ட்ரால் தான். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டதாலும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி கொண்டே போனால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், என வரிசை கட்டி கொண்டு உங்களின் உடலில் காத்திருக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபட நாம் சாப்பிட கூடிய உணவுகளே போதும். எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எளிதில் கொலஸ்ட்ராலை கரைக்க முடியும் என்பதை இனி பார்ப்போம். கொலெஸ்ட்ரோல்- பெரிய எதிரி..! நமது உடலின் எதிரியாக கருதப்படுவதில் இந்த கொலஸ்ட்ராலும் ஒன்று. நாம் தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு கொண்டே போவதால் இவற்றின் அளவு அபரிமிதமாக கூடி விடுகிறது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகினால் உயிருக்கே கூட உலை வைக்க கூடும். பீன்ஸ் பீன்ஸ் பல வகைகளில் கிடைக்கிறது. எந்த வகையாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. நீங்கள் தினமும் உங்களின் உணவில் பீன்ஸ் சேர்த்து கொண்டால் மிக எளிதில் குடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து விடலாம். மேலும், கெட்ட கொலெஸ்ட்ராலை உடலில் சேர விடாமலும்

தைராய்டு பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் remedy for tyroid problem

Image
தைராய்டு உங்கள் கவனத்திற்கு கர்ப்பமாகி ஓரிரு மாதங்களிலேயே கருச்சிதைவு ஏற்பட்டதால் சாரா மிகவும் மனமுடைந்து போனார். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, திரும்பவும் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. பல மருத்துவப் பரிசோதனைகள் செய்தும் காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருடங்களில், சாராவின் உடல் பருக்க ஆரம்பித்தது; பார்த்துப் பார்த்து உணவைச் சாப்பிட்டும், தவறாமல் உடற்பயிற்சி செய்தும்கூட இப்படி ஆனது. அதுமட்டுமல்ல, காலில் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டது, குளிர் தாங்க முடியாமல் போனது. கடைசியில், இரத்தப் பரிசோதனைகளும் தைராய்டு சுரப்பியின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையும் செய்ததில் அவருக்கு ஹாஷிமோட்டோ தைராய்டிடிஸ் எனப்படும் வியாதி இருப்பது தெரிந்தது; அதுவே அவருக்கு ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.* அநேகரைப் போல சாராவும் ஆரம்பத்தில் தைராய்டைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. ஆனால், அவருடைய உடல்நிலை மோசமடைந்த பிறகுதான், அந்தச் சுரப்பி எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டார். தைராய்டு சுரப்பி தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில

பன்றிக்காய்ச்சல் தடுப்பு முறைகள் - அறிகுறிகள் - சிகிச்சைகள்

இன்று உலக மக்களை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக்காய்ச்சல் உருவெடுத்துள்ளது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மக்களை காத்திட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் அதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போகும் சூழ்நிலை சில உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. பன்றிக்காய்ச்சல்:  தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மெக்சிகோவில் தான் இந்த காய்ச்சல் முதலில் தோன்றியது. அந்த சமயத்தில் அந்தக் காய்ச்சலைப் பார்த்து உலகமே பயந்தது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அன்று அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்தார்கள். இந்த காய்ச்சலுக்கு ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டினர். ‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும். தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகம