Posts

Showing posts from October, 2017

டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்பிக்க

வெயில் காலம் முடிந்து, மழை துவங்கும் காலத்தில் வரக்கூடிய நோய்களில், ' டெங்கு ' காய்ச்சலும் ஒன்று! வைரஸ் கிருமிகளால் பரவுவதாக குறிப்பிடப்படும் இந்நோய்க்கு, நவீன மருத்துவத்தில் கூட மருந்து கிடையாது. நிலவேம்பு மற்றும் ஆடாதொடை கஷாயம் இரண்டுமே, டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது. நிலவேம்பு சூரணம், 5 கிராம், ஆடாதொடை சூரணம், 5 கிராம் எடுத்து, 400 மி.லி., தண்ணீரில் காய்ச்சி, அதை, 100 மி.லி.,யாக வற்ற வைத்து, வடிகட்டி, காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் குடித்தால், டெங்கு வராமல் தடுக்கலாம். இக்கஷாயம், கசப்பாக இருக்கும் என்பதால், குடித்து முடித்ததும், சர்க்கரையை எடுத்து வாயில் போடக் கூடாது. அது, மருந்தின் வீரியத்தைக் குறைத்து விடும். அதற்கு பதில், ஒரு மிளகை மென்று, ஒரு தேக்கரண்டி தேனைக் குடித்தால், உடனே, கசப்பு போய்விடும். தவிர, துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், டெங்கு மட்டுமின்றி, இந்த சீசனில் வரக்கூடிய எல்லா ஜுரங்களையும் அது, கட்டுப்படுத்தும். உணவில் சின்ன வெங்காயம், மஞ்சள், ஓமம், சீரகம் இவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், இயற்கையாகவே, நோய் எதிர்ப்பாற்றல்

டெங்கு காய்ச்சல் - அறிகுறிகள் - பரிசோதனைகள் - தடுப்பு முறைகள் !

மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு! கொசு ஒரு பக்கம், சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது. இருந்தும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. ``டெங்கு பற்றிய பயமும் உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைவதற்கு அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரமற்றச் சூழல்தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை என்பதையும் ஒவ்வொருவரும் உணரடாக்டர் தேவராஜன் வேண்டும். டெங்கு ஒழிப்புக்கான அரசின் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்புத் தர வேண்டும். அப்போதுதான் டெங்குவிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்