Posts

Showing posts from January, 2018

புத்தாண்டு ராசி பலன்கள் - 2020

Image
நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி, திங்கட்கிழமை, தட்சிணாயனம் ஹேமந்த ருது, வளர்பிறையில் சதுர்த்தசி திதியில், சமநோக்கு கொண்ட மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்கினத்தில், சுப்பிரம் நாமயோகம், வணிசை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12-க்கு 1.1.18 -ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப் படி சந்திரனின் ஆதிக்கத்தில் (2+0+1+8=2) இந்த ஆண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிஜ், ஏ.சி மற்றும் சமையலறைச் சாதனங்களின் விலை குறையும். காய்கறி விலை குறையும். நகரத்தைக் காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதைத் தடுக்க சட்டம் வரும். கைம்பெண் மற்றும் விவாகரத்து வாங்கியவர்கள் சமூகத்தில் சாதித்துக் காட்டுவார்கள். பெரிய பதவியிலும் அமர்வார்கள். ஆபரணங்கள் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். வ

பயமுறுத்தும் பறவை காய்ச்சல்

Image
பேர்ட் ஃப்ளூ அல்லது ஏவியன் இன்ஃப்ளூயென்ஸா என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் பற்றி நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் கேள்விப்படுகிறோம். ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸை கண்டு அணு ஆய்தத்திற்கு அஞ்சுவது போல் அஞ்சுவதன் காரணம் இதன் பயங்கரமான உயிர் குடிக்கும் தன்மையே. இதனை தீர்த்துக் கட்ட உலக நாடுகள் பல்வேறு வகையில் நட்வடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பறவைக் காய்ச்சல் பற்றி நாம் அறிய முயல்வோம். பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக பறவைகளை தாக்கும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் ஆகும், சில அரிய வேளைகளில் பன்றியையும் தாக்கும். வீட்டில் வளர்க்கும் கோழி உள்ளிட்ட பறவை இனங்கள் இந்த வைரஸினால் தாக்கமுறும்போது இது மிக அபாயமான தொற்று நோயாக பரவும் வாய்ப்பு உள்ளது. பறவைகளுக்கு வரும் நோய்களில் இரண்டு வகைகள் உண்டு. முதலில் சிறு நோய் ஏற்படும் அதாவது ரெக்கைகள் சொறசொறப்பாவதன் மூலம் இதன் அறிகுறிகள் தெரியவரும், அல்லது முட்டைகள் இடுவதில் கடும் எண்ணிக்கை குறைவு ஏற்படும். இரண்டாவது வகைதான் இந்த அபாய பறவைக்காய்ச்சல் வைரஸ். இது தொற்றினால் மரணம் உடனடியாக நிகழும். இதன் அறிகுறிகள் தெ