Posts

Showing posts from June, 2016

முக கருமை போக்க பேஸ் கரப்பர் (face scrubber)

Image
முகத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கிட எத்தனையோ வழிமுறைகளை கையாளுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் முழுமையான தீர்வை தருகிறதா என்றால் நிச்சயம் இலை என்று சொல்லாம். கூடவே பக்க விளைவுகளை கொடுத்து முகத்தின் இயற்கை அழகை கெடுத்து விடுகின்றன. ஆனால் நாம் இங்கு கொடுத்திருக்கும் முறை மிக சுலபமானது. வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்கள். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதுபோன்று இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து, முக கருமையை மிக எளிதாக போக்கிடலாம் . இந்த FACE SCRUBBER பயன்படுத்தி வந்தால் வெகு விரைவில் முக நிறம் மாறி, பளபளப்பு தோற்றத்தினை கொடுக்கும். சர்க்கரை - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை : சர்க்கரை கரையும் வரை எலுமிச்சை சாற்றில் கலந்து பின் முகத்தில் போடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.  சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் பாதிப்படைந்த  சருமத்தை சரி செய்கிறது. இந்த பேஸ்கரப்பர்   முகத்தில் உள்ள கருமயை  நிிக்கி முகம் பளபளக்க செய்கிறது

முழங்கை, முழங்கால் களில் உள்ள கருமை நீங்க

Image
கை முட்டி, கால் முட்டிகளில் உள்ள கருமையை போக்க இயற்கை வழிமுறைகள்:  சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா - 2 டீ ஸ்பூன் சோற்றுக் கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன் இவை அனைத்தையும்  நன்றாக கலந்து,கை கால்   மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம் தினமும்   இவ்வாறு  செய்து  வந்தால்  2 வாரங்களிலேயே கருமை போய்விடும் 2 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

ஆயுளை குறைக்கும் ரீபைண்ட் ஆயில் !

Image
ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? ஆலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக், அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால், “சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்” என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல்

வெஸ்ட்டர்ன் டாய்லெட் & இந்தியன் டாய்லெட் எது நல்லது?

Image
காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. வெளிநாடு கழிப்பறை “இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம்” என்கிறார் லாவண்ய சோபனா திருநாவுக்கரசு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரா. திருநாவுக்கரசின் மனைவி. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ‘பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்’ குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். கழிப்பறை ஆரோக்கியம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது: ஆதிகாலம் முதல் “உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்து கிறார்கள்: இந்திய முறை கழிப்பறை (squat position), மேற்கத்திய முறை (sitting position). ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (squat position) உட்காரும் முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது. இதற்கு மலாசனம் என்று பெயர். நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது. இந்திய கழிப்பறை இதை எத்தனை மு