Posts

Showing posts from June, 2021

கறிவேப்பிலையின் 12 விதமான மருத்துவ பயன்கள்

Image
 கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன. கறிவேப்பிலையின் 12 விதமான மருத்துவ பயன்கள் கறிவேப்பிலை சாப்பிடுவதால் மற்றும் கறிவேப்பிலை வெளி மருந்தாகப் பயன்படுத்துவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கீழே காணலாம். 1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது: நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான (Anemia) காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும். 2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது: கறிவேப்பிலை வயிற்றுப் போ