Posts

Showing posts from January, 2020

நரம்பு தளர்ச்சியா? இந்த ஒரு கீரை போதும்... நடுங்குற கை கூட ஸ்ட்ராங்கா மாறிடும் !

Image
நரம்பு தளர்ச்சி நீங்க இது நல்ல கீரைங்க.. சாப்பிட்டுப் பாருங்க. அப்படியே அசந்து போய் பார்ப்பீங்க. உடனடி நிவாரணம். நிரந்தர குணமாவதை நீங்களே பார்ப்பீங்க.  காலை மற்றும் இரவு நேர உணவுகளை விட அறுசுவையுடன் விருந்து போல வயிறு முட்ட ரசித்து, ருசித்து சாப்பிடும் உணவு மதிய உணவுதான். ஆகவேதான் கல்யாணம், விழா போன்ற கொண்டாட்டங்களில் மதிய உணவான சாப்பாட்டை வயிறு முட்ட ருசிப்பதற்கு ஒரு கூட்டமே பந்திக்காக காத்திருப்பதுண்டு. ஆகவே மதிய சாப்பாட்டில் காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு பலவிதமான கூட்டு, பொரியல், பச்சடி என நாக்கில் எச்சில் ஊறவைக்கும் உபஉணவுகளும் பரிமாறப் படுவதுண்டு. ஒவ்வொரு நாள் உணவிலும் ஏதேனும் ஒரு கீரையை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோல் கீரையை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஆண்மை அதிகரிப்பதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. பெரும்பாலான கீரைகள் மிகவும் குளிர்ச்சித்தன்மை உடையதுடன் மலத்தையும் இலக்கும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு சளித்தொல்லை, தொண்டைக்கட்டு போன்றவை எப்பொழுதாவது ஏற்படலாம். இந்த தொல்லைகளு

முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கும் முடக்காற்றான்

Image
முடி உதிர்வை தடுக்கும் முடக்கற்றான் கீரை தலை முடி உதிர்வு இப்பொழுது ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்னை. பூமியின் வெப்பநிலை அதிகரித்திருக்கும் வேளையில் எங்கு பார்த்திடினும் ஏதேனும் ஒரு உடல் கோளாறுகள் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர். அவற்றில் முதன்மையானதுதான் தலைமுடி உதிர்தல் பிரச்னை. வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். இரவில் நெல்லிக்காய்களை தண்ணீ ரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீ ரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து த லையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும். தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் தீர்க்கும் மூலிகைகள் !

Image
90s கிட்ஸ்க்கு இது நிச்சயமாக தெரியும். பள்ளி விடுமுறை நாட்களில் கருப்பாக பழுத்து விழும் பழத்தை எடுத்து சாப்பிட்டால், அது சற்று கார்ப்புச்சுவை கலந்து இனிப்பாக இருக்கும். அதை அதிகம் சாப்பிட்டால் காது கேட்காது என பாட்டி எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் அப்பொழுது நூணா வின் பலன்கள் தெரியவில்லை. அங்கங்கு காணப்படும் நூணா மரத்தின் பயன்கள் இத்தனையா எனும்போது வியப்பளிக்கின்றது. நுணா. 1. மூலிகையின் பெயர் -: நுணா. 2. தாவரப்பெயர் - MORINDA TINCTORIA. 3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE. 4. வேறு பெயர்கள் -: மஞ்சணத்தி, மஞ்சள் நீராட்டி என்பன. 5. இன வேறுபாடு -: வெண்நுணா. (நோனி) MORINDA CHITRIPOLIA 6.பயன்தரும் பாகங்கள் -: துளிர்,இலை, பழுப்பு, காய், பழம், பட்டை, வேர் ஆகியவை மரத்துவப் பயனுடையது. 7. வளரியல்பு -: எல்லா வித நிலங்களிலும் வளர்க்கூடிய சிறுமரம். தமிழகமெங்கும் வளர்கிறது.மா இலை போன்றும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம். சுமார் 15 அடி உயரம் வரை வளரும். மரத்தின் உடபுறம் மஞ்சள் வண்ணமாயிருக்கு

வயிற்று வலி தீர கொள்ளுக்காய் வேளை மூலிகை !

Image
கொள்ளுக்காய் வேளை. 1. மூலிகையின் பெயர் -: கொள்ளுக்காய் வேளை. 2. தாவரப்பெயர் -: TEPHRUSIA PURPUREA. 3. தாவரக்குடும்பம் -: FABACEAE. 4. வேறு பெயர்கள் -: சிவ சக்தி மூலிகை. Wild Indigo. 5. பயன் தரும் பாகங்கள் -: இலை, வேர்,பட்டை, விதை முதலியன. 6. வளரில்பு -: கொள்ளுக்காய் வேளை கொழுஞ்சி வகையைச்சேர்ந்தது. இதன் பிறப்பிடம் ஆஸ்திரேலியா- மடகாஸ்கர், பின் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியத் தீவுகள், ஓமன்,தென் அரேபியா, ஏமன் வட அமரிக்கா தென் அமரிக்காவில பிரேசில் போன்ற நாடுகளில் காணப்பட்டது. தமிழ் நாட்டில் சாலையோரங்களில் தானாக வளரும் சிறு செடியினம். நெல்லிற்கு அடியுரமாகப் பயன்படும். இது சிறகுக் கூட்டிலைகளையும் உச்சியில் கொத்தான செந்நீல மலர்களையும், தட்டையான வெடிக்கக்கூடிய கனிகளையும் உடைய தரிசு நிலங்களிலும் காணப்படும் சிறு செடி.. இது சிறந்த மருத்துவ குணமுடையது. எதிர்பாற்றலும் ஊட்டமும் கொடுக்கக்கூடியது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. 7.மருத்துவப் பயன்கள் -: இதன் வேர், பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது. கோழையகற்றுதல், மலத்தை இளக்கும், தாது ஊக்கமூட்டும், சீதமகற்றும், பூச்சியை வெளியேற்றும்.