Posts

Showing posts from April, 2016

வெயில் காலத்தில் வயிற்றுப் போக்கு ஏற்படுவது ஏன்?

கொளுத்துற வெயில்ல வர்ற நோய்களும் நிறைய இருக்குங்க. வியர்க்குரு, தோல் வியாதிகள், உடல் சூடு ..இப்படி. அதிப்படியான வெப்பத்தினால் மனித உடலுக்கு தீங்கு அதிகம். அப்படி கோடைகாலத்தில் வர்ற ஒரு பாதிப்புதான் வயிற்றுப் போக்கு . இது எதனால் வருது? எப்படி அதிலிருந்து விடுபடலாம்னு இயற்கையான வைத்திய முறைகளை தெரிஞ்சுக்குவோம். கோடை காலத்தில் உண்டாகிற கடுமையான வெப்பத்தின் காரணமாகச் சரும நோய்கள் மட்டுமன்றி வயிற்றிலும் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அவற்றில் ‘ கோடை கால வயிற்றுப்போக்கு ’ (Summer Diarrhea) முக்கியமானது. காரணம் என்ன? குடலில் செரிமானத்துக்கு உதவுகிற என்சைம்கள் வெப்பக் காலத்தில் குறைவாகச் சுரப்பதால், இந்த வகை வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அடுத்து, வெப்பம் நிறைந்த பருவநிலையில் சில பாக்டீரியாக் கிருமிகள் வளர்ச்சி அடைவது அதிகரிக்கிறது. நாம் பயன் படுத்தும் குடிநீர், உணவில் இவை கலந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. விப்ரியோ காலரா, எஸ்செரிச்சியா கோலி, சிகெல்லா, சால்மோனெல்லா, ரோட்டா வைரஸ், ஆஸ்டியோ வைரஸ், அடினோ வைரஸ், நார்வா வைரஸ், எண்டிரோ வைரஸ், அமீபா, ஜியார்டியா, குடல் புழுக்கள் ஆகியவை வயிற்றுப் போக்க

தலைமுடி வேகமாக வளர இதை ட்ரை பண்ணுங்க

உங்களுக்கு முடி வளரமாட்டீங்குதா? எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம். என்ன தான் முடி வேகமாக வளரும் என்று கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், சரியான சத்துக்கள் முடிக்கு கிடைக்காமல் போனால் அதன் வளர்ச்சி தடைப்படத் தான் செய்யும். எனவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய செயல்களைப் பின்பற்றி வந்தாலே போதும். நிச்சயம், முடியின் வளர்ச்சியைக் காணலாம். வாழைப்பழ மாஸ்க் 2 வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சியில் மாற்றத்தைக் காணலாம். விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் முடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் ஒரும

குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் குணமாக

Image
கடுமையான காய்ச்சல், மூச்சுவிட சிரமம் என குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது நிமோனியா. நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். நிமோனியா அறிகுறிகள் நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படும் பட்சத்தில் தொடர் இருமல் ஏற்படும். தாய்பால் குடிக்க விரும்ப மாட்டார்கள். மூச்சுவிட சிரமப்படுவார்கள். சருமம் நீல நிறத்தில் மாறலாம். ஒருவருடத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு வலி, வாந்தி ஏற்படும். இருமல் நுரையீரல் தொடர்பான பிரச்சினை அனைவருக்கும் ஒரேமாதிரிதான் இருக்கும். சுடுநீர் ஒத்தடம் நிமோனியோ காய்ச்சலை தணிக்க வெந்நீர் ஒத்தடம் தரலாம். பாட்டிலில் வெந்நீரை ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் நெஞ்