Posts

Showing posts from October, 2016

பால்வினை நோய் எய்ட்ஸ் அறிகுறிகள் !

Image
பால்வினை நோய்கள் என்றால் என்ன? பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும். இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன. எய்ட்ஸ் எப்படி பரவாது? 1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது. 2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது. 3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது. 4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது. 5.ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம். 6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது. எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்

தாய் பால் சுரக்கச் செய்யும் உணவுகள் !

இரும்பு சத்துள்ள உணவு தான் பால் சுரக்க நமக்கு அதிகமாக உதவுகிறது. அதனால் தான் இரும்பு சத்து அதிகம் உள்ள கீரை, வெந்தயம், சீரகம், பூண்டு அதிக அளவில் சேர்த்துக் கொள்ள சொல்கிறார்கள். நீர் சத்துள்ள காய்கறிகளையும் சேர்க்கணும். கத்திரிக்காய், காலிஃப்ளவர், சுரக்காய், வெண்டைக்காய், நெய் , பருப்பு எல்லாமே பால் சுரக்க உதவி செய்யும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். அதே போல் சீரகமும் சாப்பிடவும். நல்ல பலன் இருக்கும். மாமிசம் என்றால் முட்டை, மீன் (பால் சுறா), குரும்பாட்டுக்கறி, கருவாடு நல்ல பலனை தரும். முட்டை ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதே போல் கறி வாரத்திற்கு இரு முறையே போதுமானது. குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை இரும்பு மற்றும் கால்ஷியம் மாத்திரையை விடாமல் எடுத்துக் கொள்ளனும். ஒரு நாளைக்கு மூன்று க்ளாஸ் பாலே போதுமானது. தண்ணீர் எட்டு முதல் பத்து க்ளாசுக்கு மேல் குடிக்க கூடாது. நிறைய காய்கறிகள் பழங்கள் சாப்பிடுங்கள். அதிகமாக பால் குடித்தால் அல்லது அளவுக்கு அதிகமாக சாபிட்டால் தான் பால் சுரக்கும் என்றில்லை. சரியா

மார்பு சளி குணமாக 8 மருத்துவ குறிப்புகள் !

இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும். 200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும். இஞ்சி முரப்பாவால் வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும். 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, 2 வேளை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல், சளி அடைப்பு நீங்கும். முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக

சளி தொல்லை தீர வீட்டு மருத்துவம் !

நம்முடைய முன்னோர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து நோய்களை விரட்டினர். அவை நல்ல பலனை அளித்து வந்துள்ளது. இப்பொழுது எங்குப் பார்த்தாலும் மழை நீர் தேங்கி பல தொற்று நோய்களையும், காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்படுத்தி வருகிறது. சளி பிடித்தால் மூக்கை வேகமாகச் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் மூக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச்செவிக் குழாய்க்குள் புகுந்து  காதைச் செவிடாக்கி விடக்கூடும். சளியை விரட்டும் சித்த வைத்தியம் : 1. கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும். 2. சளி மற்றும் தலைபாரம் குறைய , கிராம்பைத் தண்ணீர் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் பலன் கிடைக்கும். 3. சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும். 4. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க, ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும். 5. மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க: மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு ம