Posts

Showing posts from November, 2017

கழுத்து கருமை நீங்க டிப்ஸ் !

Image
கழுத்து கருமைக்கு நிரந்தர தீர்வு! கழுத்து டாலடிக்க, 'டிப்ஸ்' வழங்கும், பியூட்டிஷியன் வசுந்தரா: பெரும்பாலானவர்கள் முகத்தை மட்டும் நன்கு பராமரித்து, கழுத்தை விட்டு விடுவர். கழுத்தைச் சுற்றியும், அதன் மடிப்புகளிலும் அதிக, 'பிக்மென்டேஷன்' இருக்கும். கழுத்தை சுத்தமில்லாமல் வைத்திருப்பது, ஹார்மோன் மாற்றம், வெயிலில் அதிகம் செல்வது, மருந்துகளின் பக்க விளைவு, சர்க்கரை நோய், செயின் அணிவதால் அலர்ஜி, 'ஒபிசிட்டி' போன்றவை, இதற்கு காரணம்.கழுத்து கறுப்பு நீங்க, தேனுடன், எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சம அளவு சேர்த்து கழுத்தை சுற்றி தேய்த்து, 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரத்தில் மூன்று நாள் இப்படி செய்தால், மாற்றம் தெரியும்.நான்கைந்து பாதாம்களை இரவு ஊற வைத்து, காலையில் கூழாக அரைத்து தேய்த்தும், வெள்ளரிக்காயை அரைத்து தேய்த்தும், கற்றாழை ஜெல் தேய்த்தும், நான்கு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன், பால் சம அளவு சேர்த்து கழுத்தில் தடவி, 20 நிமிடங்களில் கழுவலாம். ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸை சம அளவு எடுத்து, கழுத்தை சுற்றி தடவி, 20 நிமிடம் கழித்து, எண்ணெய் இல்லாமல்