Posts

Showing posts from February, 2018

கல்லீரல் நோய் அறிகுறிகள்

உடலின் மிக்க முக்கியமான மென் உறுப்பு கல்லீரல். இந்த உறுப்பு கெட்டுவிட்டால் உடலில் பல அசௌகரியங்கள் தோன்றும். கல்லீரல் நோய் அறிகுறிகள் சாதாரணமாக தோன்றும். அதனால் கல்லீரல் கெட்டு போய்விட்டதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. என்றாலும் கல்லீரல் அதிகமான பாதிப்பை அடையும்போது சில அறிகுறிகள் தோன்றும். கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்  கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும். செரிமானப் பிரச்சனை  கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும். வெளுத்த சருமம்  கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும். அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்  உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில்

பப்பாளி சாகுபடியும் அதன் பயன்களும்

சத்து நிறைந்த கனி வகைகளில் பப்பாளியும் ஒன்று.  தொடர்ந்து காய்க்க கூடியது . இதன் ஆயுள் காலம் சுமார் இரண்டு ஆண்டுகள். பப்பாளி நாற்று விடும்போதே நடவு வயல் சுற்றி அகத்தி செடிகளை நெருக்கமாக விதைத்து விடுவதால் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மை உடையது. ஏக்கருக்கு கிட்டத்தட்ட 20கிராம் விதைகள் வரை தேவை. இடைவெளி ஆறு முதல் ஏழு அடி வரை. மண் அனைப்பது மூலம் செடிகள் சாயாமல் தடுக்கலாம். அதிகம் பயன்பாடு உள்ள ரகங்கள்  ரெட் லேடி ,  ராயல் ரெட் ,  ஜின்டா  மற்றும் கோவை ஆராய்ச்சி நிலைய ரகங்கள்.  சொட்டு நீர் பாசனம் சிறந்தது . அனைத்து பட்டங்களிலும் நடவு செய்யலாம். பிளாஸ்டிக் பைகள் மற்றும் tray க்களில் நாற்று விடலாம். கண்டிப்பாக நாற்று விடும்போதே வேப்பம் புண்ணாக்கு தொழு உரத்தோடு கலந்து இடுவதால் வேர் அழுகலை தடுக்கலாம். மண்புழு உரம் இடுவதால் மகசூல் அதிகரிக்கும். நாற்பது முதல்  அறுபது நாள் நாற்று நடுவது சிறப்பு. தொடர்ந்து காய்ப்பதால்   நுன்னூட்ட சத்துக்கள் அதிகம் தேவை, ஆதலால் நாற்று விடும்போது, செடிகளை நடவு வயலில் நடும் போது மற்றும் மாதம் ஒரு முறை கண்டிப்ப

அமுத கரைசல் தயாரிக்கும் முறை

நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும் அமுத கரைசல் நுணுக்கமான புரிதலுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் அணுகினால், விவசாயம் நிச்சயம் அபரிமிதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தத் தகவலில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? என்று மற்றவரிடம் கேட்காமல், மற்றவர் கேட்க நீங்களே முன்னுதாரணமாகுங்கள். இயற்கை நம் தாய். தாய் என்றுமே பிள்ளைகளை காக்கவே செய்வாள். அந்த தாய் பூமியைக் காப்பதில் முதல் அடி எடுப்போம் நம் அமுத கரைசலுடன். அமுத கரைசலை பொதுவாக  நிலவள ஊக்கி  என்று அழைப்பார்கள். அது நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் அளவை பெருக்கும். அமுத கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும். அமுத கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை பயிர்களின் மேல் தெளிக்கலாம். தயாரிக்கும் முறை நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ நாட்டுப்பசு கோமியம் = 10 லிட்டர் வெல்லம் = 250 கிராம் தண்ணீர் = 200 லிட்டர் முதலில் நாட்டுப