Posts

Showing posts from November, 2016

இதய அடைப்பை போக்கும் மாமருந்து !

Image
தேனும் லவங்கப் பட்டையும்... தெரிந்ததும்... தெரியாததும்... உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேன் எனும் அற்புத உணவு. தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும். தேனும் லவங்கப் பட்டையும் குணப்படுத்தும் நோய்கள் இதய நோய் இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது. அற்புத மருந்து இதோ! தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து

தொழுநோய் குஷ்டரோகம் குணமாக சித்த மருத்துவம் !

அன்பு, அமைதி, கருணை, சமத்துவம், சகோதரத்துவம் என்று வார்த்தை அளவில் தான் உலகில் உள்ள அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, நடைமுறை வாழ்க்கையில் அதை யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. “பேச்சு பெரிதுதான், ஆனால் செயல் அதைவிட மிகப் பெரியது” என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். எய்ட்ஸ் நோயாளிகளைக் கூட இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் அளவிற்கு விழிப்புணர்வும், சகிப்புத் தன்மையும், மன பக்குவமும் பெற்று விட்ட மக்கள், ஆனால், தொழு நோய்க்கு உள்ளானவர்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி, வீட்டை விட்டு வெறுத்து ஒதுக்கி, தனிமைப் படுத்தி அவர்கள் மனதில் ஆறாத ரணத்தை, தனி மனிதனும், இச் சமூகமும் ஏற்படுத்தி வருவதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது. நமது இந்தியாவைப் பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள்தொழுநோயாளிகளுக்கென்று இலவச வீட்டுமனைகளையும், மருந்து, மாத்திரைகளையும், தொழு நோயாளிகளுக்கான இல்லங்களையும் அமைத்து கொடுத்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தொழு நோயாளிகளின் விசியத்தில் ஓரளவு அக்கறையோடு செயல்பட்டு வருவது ஆறுதலை அளிக்கிறது என்றாலும், வெகு ஜன மக்களின் மனதில் த

முதுகுவலி நீங்க எளிமையான உடற்பயிற்சி (video tutorial)

Image
இன்றைய காலத்தில் மனிதனை அதிகம் அவதிக்குள்ளாக்குவது முதுகு வலி. படுக்கவும் முடியாது. எழுந்திருக்கவும் முடியாது. நிற்கவும் முடியாது. எந்த நிலையில் இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முதுகு, இடுப்பு கடு கடு வென வலிக்க ஆரம்பிக்கும். அதற்கு காரணம். செய்யும் வேலை, இருக்கும் இடம், உட்கார்ந்து இருக்கும் பொசிசன் போன்றவைகள் தான். அளவுக்கதிமாக தின்று கொழுத்து எடையை கூட்டி சதை பிண்டமாக இருந்தாலும் அப்படிப்பட்ட முதுகு வலி வர செய்யும். என்ன செய்தால் இவற்றை மிக எளிமையாக விரட்டலாம் என்பதை இந்த வீடியோவில் இந்த அம்மணி சொல்லிக் கொடுக்கிறார். பார்த்து நீங்களும் செய்து பயன்பெறுங்கள். கட்டாயம் செய்து வந்தால் உங்களுக்கு வந்த முதுகு வலி ஒரு வாரத்தில் ஓடிவிடும். நிச்சயமாக இது ஒரு நல்ல பயனுள்ள வீடியோ என்பதில் சந்தேகமில்லை. how to stretch a body (video tutorial). | 12 Minute Stretch Routine for Back Pain Relief

மூல நோய் தீர இயற்கை உணவு பொருள்

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இது கட்டாயம் வரும். பைல்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த மூல நோய் ஆசன வாயில் தொடங்கி, அது உள்ளே சென்று வலியை ஏற்படுத்தி ரணமாக்கி ஆளையே கொன்று விடும் அளவிற்கு வலித்து தொலைக்கும். வெளிமூலம், உள் மூலம் என இரு வகையாக இந்த நோயை பிரிக்கின்றனர். எந்தவொரு மூலநோய் க்கும் கீழ்கண்ட இயற்கை வைத்திய உணவுகள் நிச்சயம் 100% பலன் கொடுக்கும். மூல நோய் தீர இயற்கை உணவு பொருள் கோவைக்காய் - 5 சின்ன வெங்காயம் - 5 சீரகம் - 1/2 தேக்கரண்டி சோம்பு - 1/2 தேக்கரண்டி மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி கொத்தமல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள். மூல நோய் வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது. Tags: Moola Noi Gunamaga, Mool Noikku iyarkkai vaithiyam, Moola noi theera, therapy for piles in Tamil.