மழைக் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற பசலை கீரை சூப்

பசலைக்கீரை சூப் (உடல் ஆரோக்கியம்)

மழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதுவும் பசலைக்கீரையை பொரியல், கடையல் என்று செய்து சுவைத்து போர் அடித்திருந்தால், அதனை மாலை வேளையில் சூப் செய்து குடியுங்கள்.
pasalai keerai soup
பசலை கீரை சூப்

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
பிரியாணி இலை - 1
கிராம்பு - 4
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள்
பசலைக்கீரை - 3 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை,
கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம்
வதக்கி, பின் பசலைக்கீரை சேர்த்து 5-7 நிமிடம் நன்கு
பச்சை வாசனை போக வதக்கி இறக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உள்ள பட்டை, பிரியாணி இலை, கிராம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டு, மீதமுள்ளதை மிக்ஸியில்
போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தண்ணீர்
ஊற்றி அடுப்பில் வைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் சோள மாவை பாலில் சேர்த்து கலந்து, சூப்புடன்
சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால்,
சுவையான பசலைக்கீரை சூப் ரெடி!!!

pasalai keerai soup

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்