டெபிட் கார்ட், கிரய பத்திரம் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி?

டெபிட் கார்ட், கிரய பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், எவ்வளவு செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

pathiram-patta


கிரயப் பத்திரம்:

கிரயப் பத்திரம் பெற பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும். காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தர வேண்டும். ஆவணக் கட்டணம் ரூ.100. இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.20 கட்ட வேண்டும். ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு:

டெபிட் கார்டு திரும்பப் பெற சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுக வேண்டும். கணக்குத் தொடர்பான விவரங்கள் தர வேண்டும். இதற்குக் கட்டணம் ரூ.100. வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்களில் கிடைத்து விடும்.


நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்