முதுகு வலி காரணங்கள் மற்றும் தீர்வுகள்

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பிபிஓ, நுகர்வோர் சேவை என பல மணி நேரத்திற்கு ஒரே இடத்தில், இருக்கையில் அமர்ந்தவாறே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. அதனால் முதுகுவலி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

ஆனால், முதுகு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதிக தொலைவுக்கு இருசக்கர வாகனத்தில் பயணிப்பது, குறைந்த தொலைவே ஆனாலும் பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கும்போது ஷாக்அப்சார்பர் (shock absorber) உடலில் ஏற்படும் பாதிப்பு, ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து எழுத்துப் பணியிலோ அல்லது கணினி முன்போ அமர்ந்து வேலை செய்தல் என முதுகு வலிக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுவோரைப் பற்றிப் பார்ப்போம்.

எங்கும் கணினி; எதிலும் கணினி என்றாகி விட்ட நிலையில், கணினியில் பணியாற்றுவோர் அது எத்தகையப் பணியாக இருந்தாலும் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது இருக்கையை விட்டு எழுந்து தேநீர் அருந்தச் செல்வது, சிறுநீர் கழிக்கச் செல்வது என எழுந்து செல்ல வேண்டும்.

தவிர இருக்கையின் உயரம் ஒரே சீராக, உங்களின் உயரத்திற்கு ஏற்றவாறு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதுகு வலி ஏற்படுமானால் உடனடியாக கணினி திரைக்கும், உங்களது விசைப்பலகைக்கும் (key board), நீங்கள் அமர்ந்துள்ள இருக்கைக்கும் இடையேயான உயரத்தை மாற்றியமைத்துக் கொண்டு முதுகு வலியைப் போக்கலாம்.

மேலும் ஒரே நிலையில் (position) அமர்ந்து கொண்டு பணியாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். சற்று நேரம் நாற்காலியின் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு வேலை செய்யலாம். பிறகு சிறிது நேரத்திற்கு முதுகுக்கான சாய்மானத்தில் சாய்ந்தவாறு அமரலாம்.

முடிந்தவரை உங்களது பின் இடுப்புப் பகுதி அதாவது முதுகுத் தண்டுவடம் அமைந்துள்ள பகுதியை இருக்கையின் சாய்மானத்துடன் ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் இடுப்பு வலி ஏற்படுவதில் இருந்து ஓரளவுக்கு தப்பிக்க வழியுண்டு.

அலுவலகமோ அல்லது வீட்டு உபயோகமோ ஆடம்பரமாக இருக்கிறதே என அழகான இருக்கைகளை வாங்க முற்படாமல், முதுகுவலியை உருவாக்காத வகையிலான இருக்கைகளைத் தேர்வு செய்து வாங்கவும்.

எப்படி இருப்பினும், முதுகுவலி என்று நீங்கள் உணர்ந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

சாதாரண முதுகுவலிதானே என்று நீங்கள் கருதுவீர்களானால், அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்