சர்க்கரை நோய் கட்டுப்பாடு

ஜீரணம் கெட்டுப் போனதன் காரணமாக உடலில் உருவாகும் கெட்ட க்ளூகோஸை (சர்க்கரையை) உடலானது உபயோகப்படுத்தாமல் கழிவாகச் சிறுநீர் வழியாக அதிகப்படியாக வெளியேற்றும் செயலைச் சர்க்கரை நோய் என்று கூறி, அந்தக் கழிவுகளைத் திரும்பவும் உடலுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் வேலையைச் செய்கின்றன சர்க்கரைக்கான மருந்து மாத்திரைகள்.
sarkkarai noi
சர்க்கரை நோய் குணமாக

உடல் நிராகரிக்கும் கெட்ட சர்க்கரையைத் திரும்பவும் திணிக்கும்போது உடல் அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை கழிவாக உடல் முழுவதும் ஒவ்வொரு அணுவிலும் தேங்கி, பல்வேறு நோய்களாக வெளிப்படுகின்றன.

அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்கில் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிக்கொண்டாலும், சொல்ல முடியாத பிரச்சினைகள் தோன்றுகின்றன.

உடலில் இருந்து வெளியேற முடியாமல் நாட்பட்டுச் சேரும் இந்தக் கெட்ட குளூகோஸ் கழிவு, உடலில் தங்கி என்னென்ன நோய்களைத் தோற்றுவிக்கிறது தெரியுமா?

சிறுநீரகச் செயல் இழப்பு, இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், தலைவலி, தலைபாரம், கண், காது சம்பந்தமான தொந்தரவுகள், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, கை கால்கள் மரத்துப் போதல், எரிச்சல், தோல் நோய்கள் என்று இதன் லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். இவற்றுக்காக தனித் தனியாக நீங்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் இவை குறையவே குறையாது.

 சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் ஏன் இது போன்ற தொந்தரவுகள் வரவேண்டும்?

உடலில் இருந்து நீக்கப்பட வேண்டிய கழிவை நீக்காமல் சேர்த்து வைத்துக்கொண்டே வந்தால் அந்தக் கழிவுகள் என்ன செய்யும் என்று நீங்கள் என்றைக்காவது யோசித்துப் பார்த்தது உண்டா? கழிவை வெளியேற்ற வேண்டுமா அல்லது திரும்பவும் உபயோகப்படுத்தலாமா என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.... செயல்படுங்கள்.....! உடலானது நல்லது செய்யும் எதையும் வெளியேற்றாது.

சிறுநீரில் அதிகமாக 300 அல்லது 400 சர்க்கரை வெளியேறுகிறது என்றால் நாம் சரிசெய்ய வேண்டியது ஜீரணத்தைதான். வெளியேறும் கழிவை அல்ல. நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக் கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகள் நீங்கி, நோய் முற்றிலும் குணமாக, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளை திறக்க இது ஒன்றே போதுமே!

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்