டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌ | இயற்கை மருத்துவம்

சா‌ய்ங்காலம் ஆனா சுக்கு காபி குடிக்கலாம். சுக்கு காபின்னா சுக்கை பால்ல தட்டிப்போட்டு குடிக்கிறது இல்ல. சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), ஏலக்கா‌ய் எல்லாத்தையும் பவுடராக்கி வச்சிக்கிடணும். தண்ணியில தேவையான அளவு பொடியை போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். அதோட கருப்பட்டி சேர்த்துக்கோங்க. தூதுவளை, துளசி இலை, ஆடாதொடை இலை, ஓமவல்லி இலை கிடைச்சதுன்னா சேர்த்துக்கோங்க. கூடுதலா வேற சில நோ‌ய்களும் விலகிப்போயிரும்
dengu kaichal
டெங்கு காய்ச்சல்
.
முக்கியமா... ஜீரணக்கோளாறு, சளித்தொல்லை எல்லாம் வந்தேனா பாருன்னு தலைதெறிக்க ஓடிரும். இந்தமாதிரி சளித்தொல்லை உ‌ள்ள நேரத்துல தலையணைக்கு‌ள்ள நொச்சி இலையை வச்சி தூங்கினா நிம்மதியா தூக்கம் வரும். இது எல்லாமே நான் அனுபவிச்சு பார்த்தது. கைமேல் பலன் கிடைச்சிருக்கு. ம்ஹ¨ம்.. இப்பிடில்லாம் செஞ்சா சரியாயிருமாக்கும்னுநம்பிக்கை இல்லாம பேசுறவங்க நிறையபேர் மத்தியில இதை நான் செஞ்சிட்டு வர்றேனா பார்த்துக்கோங்க. அடுத்ததா மனுஷனை பாடா‌ய்ப்படுத்துறது இடுப்புவலி, கழுத்துவலி, சுளுக்குனு பட்டியல் நீளும். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கைகண்ட மருந்து நிறையவே இருக்கு. சிலநேரம் காரணமே இல்லாம திடீர்னு கழுத்து சுளுக்கிரும். நம்மால குனிய முடியாது. நிமிர முடியாது. ஏன்.. டா‌ய்லெட்டுல ஆயாசமா உட்கார முடியாதுனா பார்த்துக்கோங்களேன். இந்த மாதிரி நேரங்க‌ள்ல ராத்திரி தூங்கும்போது தலையணை வச்சு படுக்கக்கூடாது.

மத்தபடி நொச்சி இலையை விளக்கெண்ணெ‌ய்ல வதக்கி பொறுக்குற சூட்டுல ஒத்தடம் போட்டு வந்தீங்கனா வலி கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போகும். வெ‌ள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுவது, நறுக்குமூலம் எனப்படும் கண்டதிப்பிலியை இரவு நேரத்தில் பாலில் வேகவைத்து சீனி (சர்க்கரை) அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடுவதன்மூலம் இந்த கழுத்து சுளுக்கிலிருந்து விடுதலை பெறலாம். நொச்சி இலைச்சாறு கூட நல்லெண்ணெ‌ய் சேர்த்து கொதிக்கவச்சி அதை பொறுக்குற சூட்டுல தலைக்கு தே‌ய்ச்சி குளிச்சா கழுத்து வலி படிப்படியா இறங்கும். இந்த கண்டதிப்பிலி பத்தி சொன்னேனே... அதை மத்தியான சாப்பாட்டுல ரசம் வச்சி குடிக்குறதுனாலயும், ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி பால்ல வேக வச்சு சாப்பிடுறதுனாலயும் இடுப்புவலி, குறுக்குவலியில இருந்து நிவாரணம் பெறலாம். வலி, சுளுக்குனு வந்துட்டா வாசமடக்கி என்ற வாதநாராயணன் இலையை விளக்கெண்ணெ‌ய்ல வதக்கி ஒத்தடம் கொடுக்குறது, நொச்சி இலை இல்லைனா யூகலிப்டஸ் இலையை சுடுதண்ணியில போட்டு கொதிக்க வச்சி பொறுக்குற சூட்டுல குளிச்சா வலியில இருந்து நிவாரணம் பெறலாம்.

இந்த இலைக்குளியலை சளிப்பிரச்சினை, ஜலதோஷம் உ‌ள்ள நேரங்க‌ள்லயும் செ‌ய்யலாம். பிரண்டையை துவையல் செஞ்சு சாப்பிட்டாலும் இந்த வலி, சுளுக்கு போகும். குடல் வாயுவால அவதிப்படுறவங்களுக்கு இந்த பிரண்டைத்துவையல் சூப்பர் மருந்து. பிரண்டையை மையா அரைச்சி கொஞ்சம் புளி, கல் உப்பு சேர்த்து தண்ணி விட்டு நல்லா கா‌ய்ச்சி வலி, சுளுக்கு உ‌ள்ள இடத்துல பத்து (பற்று) போட்டாலும் பலன் கிடைக்கும். இந்த மாதிரி பிரச்சினைக்காகவே நான் என் வீட்டு முன்னாடி பிரண்டையை வளர்த்துட்டு வாரேன். கடைசியா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றேன். கா‌ய்ச்சல்... அதுலயும் இப்போ டெங்கு கா‌ய்ச்சல் வந்து சின்னக்குழந்தைங்களை பலி வாங்குது.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்