குறைந்த நேர தூக்கத்தால் சிறுநீரக பாதிப்பு

நாள்தோறும் ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை (circadian clock) பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.

இதில், நாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தங்களது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4,238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.

அதாவது, இரவில் 7 மணிநேரம் தூங்கும் பெண்களைவிட, 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் பெண்களில் 65 சதம் பேரின் சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் சான் டிகோ நகரில் நடைபெற்று வரும் ஏ.எஸ்.என். கிட்னி வார நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்படும் என்றார் மெக்மில்லன்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்