நோய் எதிர்ப்பு சக்தி தரும் இயற்கை பொருட்கள்

பொதுவாக நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் தான் பல்வேறு நோய்களின் தாக்குதல். அப்படிப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும் அற்புத நிவாரணி நெல்லிக்காய். எனவே தான் ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்கினான்.

ஒரு ஆப்பிளை விட ஒரு நெல்லிக்காயில் சத்து அதிகம். எனவேதான் ஏழைகளின் ஆப்பிள் என்று இதற்குப் பெயர். நெல்லிக்காய் லேகியம் மிகச் சிறந்த மருந்து. இது காயகல்ய மூலியை. அதாவது எவ்வளவு நாட்கள் ஆனாலும் இதன் குணம் மாறாது.

இதனை வற்றலாகக் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கருப்பட்டி தேன் விட்டு லேகியமாகக் கிளறி சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். ஊறுகாய் துவையல், பச்சடி செய்து சாப்பிடலாம்.

நெல்லிவற்றலும் மஞ்சலும் சேர்த்து சூடு செய்து நெஞ்சு முகம் கழுத்தில் பற்றுப் போடசளி, சைனஸ், மூச்சுத் திணறல் குணமாகும். இந்த வற்றலை ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர சூடு நீங்கி கூந்தல் செழித்து வளரும். தலையில் அழுக்கு பொடுகு பேன் நீங்கும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்