நல வாழ்வு தரும் வாழை

 நம் நல வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது வாழை. எனவே நலவாழ்வு தரும் இதற்கு வாழை என்ற காரணப் பெயர் அமைந்தது எனலாம். இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

இதன் சிறப்பை உணர்த்தவே அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டுகிறோம். வாழை இலை சிறுநீர் பெருக்கி. அத்துடன் உடலில் உள்ள கெட்ட நீர்களை அகற்றும் தன்மை கொண்டது.

எனவேதான் அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை விளக்கெண்ணெய் தடவிய வாழை இலையில் படுக்க வைக்கிறோம். தற்போதைய மூலிகைக் குளியல் மருத்துவ முறையிலும் வாழை இலை பயன்படுகிறது.

பண்டைய நாட்களில் நம் முன்னோர் வாழை இலையில் தான் உணவு அருந்துவது வழக்கம். சூடான உணவை இலையில் வைக்கும்போது இலை சற்றே வெந்து அதன் மருத்துவகுணம் உணவில் கலந்து விடும். எனவேதான் பண்டிகை விரதம் போன்ற நாட்களில் கட்டாயம் வாழை இலையில் சாப்பிடுகிறோம்.

அதோடு படையல் செய்த இலையை அடுத்தவர்க்குக் கொடுக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களே சாப்பிட வேண்டும் என மறைமுகக் கட்டுப்பாடுகள். எனவே சூடான உணவை இலையில் பொதித்து சாப்பிட்டு வர பல்வேறு வியாதிகள் குணமாகும்.

சிறுகுழந்தைகளுக்கு வாழை இலையைக் குடிநீராக்கிக் கொடுக்கலாம். அத்துடன் வாழை இலை கொழுக்கட்டை, வாழை இலை வடகம் செய்து அனைவரும் சாப்பிட உணவே மருந்தாகி நலவாழ்வு கிட்டும். வாழையடி வாழையாக வளமான வாழ்வு கிட்டும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்