நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்

வெங்காயம் இல்லாமல் சமையலே கிடையாது எனும் அளவுக்கு அனைத்து வகை சமையலிலும் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு  சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

சிறிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாகச் சாப்பிடலாம்.

சில நிமிஷங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடலில் கட்டிகள் தோன்றும். இதற்கு, சிறிய வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி பசு நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!