தக்காளி சாதம் செய்வது எப்படி?

recipe


தேவையான பொருட்கள் : 

அரிசி - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 ஏலக்காய் - 2 கிராம்பு - 3 புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு தண்ணீர் - 5 கப் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும்.

பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி வேண்டிய அளவு உப்பை சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும். இப்போது சுவையான தக்காளி சாதம் ரெடி!!!

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்