சளி இருமல் போக கற்பூரவள்ளி பஜ்ஜி

மாலையில் டீ, காபி குடிக்கும் போது, அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலான பஜ்ஜி செய்து சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். அதிலும் சளி, இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், அதனைக் குணப்படுத்தும் கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
karpooravalli paggi

இங்கு கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு எப்படி பஜ்ஜி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி - 20 இலைகள் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு பஜ்ஜி மாவிற்கு... கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பேக்கிங் சோடா - 1 சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பஜ்ஜி மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கற்பூரவள்ளி இலை பஜ்ஜி ரெடி!!!

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்