இதய நோய் வராமல் தடுக்க இயற்கை உணவு

மனித இயக்கத்தின் மையப் புள்ளி இதயம். நமது அன்றாட உணவுகள், உணர்வுகள்தான் நமது ஆயுளைத் தீர்மானிக்கிறது. ஆனால், இன்றைய துரித உலகில் அதே உணவுகளாலும் துரிதமாக கோபம் கொள்வதாலும் நமது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இதயம் நன்றாகச் செயல்பட...இதயம் நோயின்றி இயங்க நல்ல பிராண வாயு தேவைப்படுகிறது. நமது நுரையீரலுக்கு வரும் அழுக்கடைந்த ரத்தம் தூய்மைப்படுத்தப்பட்டு இதயத்துக்குச் செல்லவேண்டுமெனில், மாசடைந்த ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்கு தேவையான பிராணவாயு போதிய அளவுக்குத் தேவை.

இதயமும் நுரையீரலும் இரண்டு கண்கள். இரண்டும் சரியாக இருக்க வேண்டும் இன்னும் சொல்லப் போனால் நுரையீலும் நன்றாக இருந்தால் இதயம் நன்றாக இருக்கும்.

இதயத்தின் முக்கிய எதிரி: மேலும் இதயத்துக்கு ஒவ்வாத உணவுகள் எனப் பட்டியலிட்டால் முதலில் இடம் பிடிப்பது நாள்பட்ட எண்ணெய்கள், மிக முக்கியமாகத் தவிர்க்கப்பட வேண்டிய உணவு.

இல்லை இல்லை அது உணவு இல்லை. ஆம் பரோட்டா! நமக்கு இன்றைய முக்கிய எதிரி பரோட்டாதான்! அடுத்து அதிக கொழுப்புள்ள உணவுகளான பண்ணை வளர்ப்பு கோழிகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்!

இதய நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியது:


1) உண்ட பின் குறுநடை கொள்வது;
2) கருவேப்பிலையை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது;
3) இரவில் அசைவ உணவுகள், தயிர், கீரை, கிழங்குகள் உண்ணாமல் இருப்பது;
4) 50 அல்லது அதற்கு மேல் வயது டையவர்கள் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது;
5) உணவில் தவறாமல் மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது;
6) ஆழ்ந்த உறக்கம் கொள்வது;
7) திரிபலா, செம்பருத்தி, அதிமதுரம், அத்தி, புதினா, கொத்துமல்லி இலைகளைப் பயன்படுத்துவது;
8) மனதில் அதிக எதிர்மறைச் சிந்தனைகள் இல்லாமல் இருப்பது;
9) காலையில் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவு, மதியம் திட உணவு, இரவில் எளிய உணவு என உணவுகளைப் பகுத்து உண்பது;

நமது உணவுகள் என்று சொல்வது, ஒவ்வொருவருடைய குடும்ப உணவுகளைக் குறிப்பிடுவதாகக் கருத வேண்டும். அன்னிய உணவுகளை உண்ணமால் இருந்தாலே நமக்கு நோய்கள் வராது.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்