சர்க்கரை நோய் தீர்க்கும் புதிய வகை மாத்திரை

தீவிர சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்றும் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது நடக்கிறது. இத்தனைக்கும் இன்சுலின் மாத்திரைகள் வந்து விட்டன.

ஆனால், மாத்திரைகளில் ஒரு சிக்கல். அவை உட்கொண்ட பிறகு வயிற்றை அடைந்ததும், ஜீரணிப்பதற்கான அமிலங்கள் இன்சுலினின் அளவையும் வீரியத்தையும் குறைத்து விடுகின்றன. இதனால், ரத்தத்தில் தேவையான இன்சுலின் கலக்காமல் விரயமாகி விடுகிறது.

இதற்கு மாற்று வழி கண்டுபிடித்திருக்கின்றனர் அமெரிக்காவிலுள்ள நயாகரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

இவர்களும் அதே மாத்திரை வடிவத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள், 'கொலஸ்டோசோம்' என்ற மிக நுண்ணிய பைகளைக் கொண்டவை. ஒரு மாத்திரையில் உள்ள நுாற்றுக்கணக்கான நுண் பைகளில் இன்சுலினை நிரப்பி அனுப்பும்போது, அவை வயிற்றில் உள்ள அமிலத்தை தாக்குப்பிடித்து, குடல் பகுதியை அடைந்து விடுகின்றன.

குடல் பகுதியில் பல சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கப்படும்போது, கொலஸ்டோசோம் பைகளும் உடைந்து, அதிலுள்ள இன்சுலின், ரத்தத்தில் அதிகம் விரயமாகாமல் கலந்து விடுகிறது என்கின்றனர் நயாகரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இந்த மாத்திரை சந்தைக்கு வந்தால், பல சர்க்கரை நோயாளிகளுக்கு நிச்சயம் ஊசிகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்