தாய் பால் சுரக்கச் செய்யும் உணவுகள் !

இரும்பு சத்துள்ள உணவு தான் பால் சுரக்க நமக்கு அதிகமாக உதவுகிறது. அதனால் தான் இரும்பு சத்து அதிகம் உள்ள கீரை, வெந்தயம், சீரகம், பூண்டு அதிக அளவில் சேர்த்துக் கொள்ள சொல்கிறார்கள்.

நீர் சத்துள்ள காய்கறிகளையும் சேர்க்கணும். கத்திரிக்காய், காலிஃப்ளவர், சுரக்காய், வெண்டைக்காய், நெய் , பருப்பு எல்லாமே பால் சுரக்க உதவி செய்யும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு காலையிலும் மாலையிலும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். அதே போல் சீரகமும் சாப்பிடவும். நல்ல பலன் இருக்கும்.

மாமிசம் என்றால் முட்டை, மீன் (பால் சுறா), குரும்பாட்டுக்கறி, கருவாடு நல்ல பலனை தரும். முட்டை ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதே போல் கறி வாரத்திற்கு இரு முறையே போதுமானது.

குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை இரும்பு மற்றும் கால்ஷியம் மாத்திரையை விடாமல் எடுத்துக் கொள்ளனும். ஒரு நாளைக்கு மூன்று க்ளாஸ் பாலே போதுமானது. தண்ணீர் எட்டு முதல் பத்து க்ளாசுக்கு மேல் குடிக்க கூடாது. நிறைய காய்கறிகள் பழங்கள் சாப்பிடுங்கள்.

அதிகமாக பால் குடித்தால் அல்லது அளவுக்கு அதிகமாக சாபிட்டால் தான் பால் சுரக்கும் என்றில்லை. சரியான விகிதத்தில் புரதம் நார் சத்து இரும்பு சத்து சேர்த்துக் கொண்டாலே போதுமானது.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்