பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள்!

வெளிநாட்டில் மட்டுமே இருந்து வந்த பன்றிக்காய்ச்சல், தற்பொழுது இந்தியாவில் பரவி வருகிறது. பன்றி காய்ச்சல் பாதிக்கு அதிகமானால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆபத்துமிக்க இந்த நோய் ஏன் ஏற்படுகிறது? நோய்க்கான அறிகுறிகள் என்ன? என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? எப்படி அதை தடுப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.


பன்றிகாய்ச்சல் பரவும் விதம்

 பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தும்மல், இருமல் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்

சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தென்படும். காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, இருமல், தலைவலி, உடல் சோர்வு போன்றவை பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு:

பன்றிக்காய்ச்சல் பல நேரங்களில் சாதாரணமாகவும், சிலநேரங்களில் அதிக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆரம்ப நிலையில் டாமி ப்ளூ மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

தீவிரமான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோய் குணமாகிறது.

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடைவடிக்கைகள்

வரும்முன் காப்பதே சிறந்த வழி. தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருப்பதும்,  மாஸ்க் அணிவதும் ஓரளவு பாதிப்பிலிருந்து தடுக்கும்.

கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக குழாய் தண்ணீரில் கழுவ வேண்டும்.

காய்ச்சல் வந்துவிட்டால், குணமாகும்வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் பிறருக்கு பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.

அருகில் உள்ள மருத்துவமனை, டாக்டர்களிடம் சென்று, போதுமான சிகிச்சையையும், அறிவுரைகளையும் பெறுவது அவசியம்.

பன்றிக் காய்ச்சல் பற்றி எந்த பீதியும் அடையாமல், பயப்படாமல், மன உறுதியுடன் இருப்பது முக்கியம். இதனால் நோயின் பாதிப்பு 50% வரை மருந்தில்லாமலேயே குறைந்துவிடும். வெகு விரைவில் நோயும் குணமாகிடும்.

Tags: panrti kaichal marunthu, panri kaichal vaithiyam, panrikaichal maruthuvam, panri kaichal arigurigal.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்