ஜிகா வைரஸ் தாக்குதல் - காய்ச்சல் அறிகுறிகள் !

மனசனுக்கு எப்படி எப்படியெல்லாம் பிரச்னை வருதுன்னு பாருங்க ! முதல்ல சிக்குன்குனியா, அப்புறம் டெங்கு, பன்றிக் காய்ச்சல், யெல்லோ பீவர், இப்போ ஜிகா வைரஸ் காய்ச்சல்.

தமிழகத்தில் 'டெங்கு காய்ச்சல்' அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் இப்பொழுது ஜிகா வைரஸ் பாதிப்பும் வந்துவிட்டது.

ஏறக்குறைய டெங்கு காய்ச்சல் மாதிரியான அறிகுறிகளைதான் ஜிகா வைரஸ் காச்சலும் இருக்கும்.

அறிகுறிகள்: 

1. கண்கள் சிவந்திருக்கும்
2. காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், சிவந்த கண்கள், உடலில் சிவந்த தடிப்புகள்.


ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது?

டெங்கு காய்ச்சலை பரப்பும் அதே ஏடிஎஸ் வகை கொசுக்களால்தான் ஜிகாவும் பரவுகிறது.
மூன்று வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் ஏடிஎஸ் கொசுக்கள், மூன்று வாரங்களில் பல்லாயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, லார்வா, பியூப்பா பத்து நாட்களில் கொசுக்களாக உருமாறும்.

எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். ஆட்டுரல், தேங்காய் சிரட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்து அவற்றை அப்புறப்படுத்துதல் அவசியம்.

எந்த ஒரு காய்ச்சலையும் கவனக்குறைவாக, சாதாரணமாக விட்டு வைக்க கூடாது. உடனே மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை, சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ்தொற்றுக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால்,  பிறக்கும் குழந்தைக்கு தலை சிறியதாக இருக்கும். குழந்தைக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

சிகிச்சை முறை :

1.முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே முதல் சிகிச்சை முறை
2. நீர் ஆகாரங்களை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. மருத்துவரை நாடாமல், நீங்களே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஆபத்து.
5. தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
6. வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
7. தேவையில்லாத பாத்திரங்களில் தண்ணீர் தேக்கி வைக்க கூடாது.
8. வீடு மட்டுமல்லாது, சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டபிறகு செய்ய வேண்டியவை. 

1.கண்டிப்பாக வெளியிடங்களுக்கு / வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
2. கொசுவலை, கொசு எதிர்ப்பு களிம்பு போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கள் கடிப்பதிலிருந்து தற்காத்துக்கொள்வதோடு, அடுத்தவர்களை அந்த கொசுக்கள் கடித்து நோய் பரப்புவதையும் தடுக்க முடியும்.
3. வெளிநாடு சென்று வருபவர்கள் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என சோதனை செய்துகொள்ள வேண்டும்.
4. கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தை நலன் காக்க இது உதவும்.


Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்