டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்பிக்க

வெயில் காலம் முடிந்து, மழை துவங்கும் காலத்தில் வரக்கூடிய நோய்களில், 'டெங்கு' காய்ச்சலும் ஒன்று! வைரஸ் கிருமிகளால் பரவுவதாக குறிப்பிடப்படும் இந்நோய்க்கு, நவீன மருத்துவத்தில் கூட மருந்து கிடையாது.

நிலவேம்பு மற்றும் ஆடாதொடை கஷாயம் இரண்டுமே, டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது. நிலவேம்பு சூரணம், 5 கிராம், ஆடாதொடை சூரணம், 5 கிராம் எடுத்து, 400 மி.லி., தண்ணீரில் காய்ச்சி, அதை, 100 மி.லி.,யாக வற்ற வைத்து, வடிகட்டி, காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் குடித்தால், டெங்கு வராமல் தடுக்கலாம்.

இக்கஷாயம், கசப்பாக இருக்கும் என்பதால், குடித்து முடித்ததும், சர்க்கரையை எடுத்து வாயில் போடக் கூடாது. அது, மருந்தின் வீரியத்தைக் குறைத்து விடும். அதற்கு பதில், ஒரு மிளகை மென்று, ஒரு தேக்கரண்டி தேனைக் குடித்தால், உடனே, கசப்பு போய்விடும்.

தவிர, துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், டெங்கு மட்டுமின்றி, இந்த சீசனில் வரக்கூடிய எல்லா ஜுரங்களையும் அது, கட்டுப்படுத்தும். உணவில் சின்ன வெங்காயம், மஞ்சள், ஓமம், சீரகம் இவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், இயற்கையாகவே, நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

டெங்குவின் தாக்கம் அதிகமானால், உடம்பில், ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, உடலின் மெல்லிய ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். இதனால், மூக்கிலிருந்து ரத்தம் வடியும். தோலில் உள் பகுதியிலும் ரத்தக்கசிவு ஏற்படும். இது, மிக மிக ஆபத்தான நிலை!

டெங்கு பாதித்தவர்களுக்கு உடல் முழுவதும் ஒருவித வலி இருக்கும்; அதற்கு, நொச்சி இலை, வேப்பிலை, பச்சைக் கற்பூரம், மஞ்சள் மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை நீரில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், உடல் வலி நீங்கும். நொச்சி இலை கிடைக்காவிட்டால், அதைத் தவிர்த்து, மற்றதை வைத்து ஆவி பிடிக்கலாம்.

சிலருக்கு இமைகளை அசைக்க முடியாத அளவுக்கு கண்களில் கடும் வலி மற்றும் கண் வறட்சி ஏற்படும். லவங்கத்தை பொடி செய்து, தாய்ப்பால் அல்லது பசும் பாலில் ஊற வைத்து, கண்களில் சில துளிகளை விட்டால் வலி குறையும்.

மேலும், டெங்கு காய்ச்சலின் போது மூக்கு அடைப்பும் ஏற்படும். இதற்கு ஓமம் ஒரு டீஸ்பூன், பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை எடுத்து இரண்டையும் துணியில் கட்டி, முகர்ந்து பார்த்தாலே சரியாகி விடும்.

காய்ச்சலின் போது, அரிசி, பூண்டு, சீரகம், உப்பு இவைகளை ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து கஞ்சியாக்கி, வெறும் தண்ணீரை மட்டும் கொடுங்கள்.

சுக்கு, மல்லி, சீரகம், ஏலக்காய், மஞ்சள் தூள் இதெல்லாம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்து இடையிடையே குடிக்கலாம்.

டெங்குவால் பாதிக்கப்பட்டோர் உடல் தேற, இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும். மற்றபடி டெங்குவின் அறிகுறிகளை கண்டுபிடித்த உடனே, சித்தா அல்லது அலோபதி மருத்துவரை பார்த்து அவரது அறிவுரைபடி சிகிச்சை எடுத்தால், டெங்குவை குணப்படுத்தலாம்.

கொசுவை விரட்ட

* தேங்காய் நாரில் நெருப்பு வைத்து, அந்தப் புகையை வீடெங்கும் காட்டலாம்.
* கற்பூர வாசனைக்கு கொசு வராது என்பதால், அதை கொளுத்தியோ, தண்ணீரில் போட்டோ வைக்கலாம்.
* கொசுவிரட்டி மருந்து தீர்ந்த பின், அந்த பாட்டிலில் சிறிதளவு மண்ணெண்ணெய் விட்டு, ஒன்றிரண்டு கற்பூர வில்லைகளை போட்டு வைக்கலாம். இதனால், உங்கள் வீட்டுக்குள் கொசு வராது; உடலுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படாது.
* நொச்சி இலை, துளசி மற்றும் தும்பைப் பூ மூன்றையும் மிக்சியில் அரைத்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, அதில், வேப்பெண்ணெய்யை கலந்து கை, கால்களில் தடவ, கொசு கடிக்காது.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்