கழுத்து கருமை நீங்க டிப்ஸ் !

கழுத்து கருமைக்கு நிரந்தர தீர்வு!

கழுத்து டாலடிக்க, 'டிப்ஸ்' வழங்கும், பியூட்டிஷியன் வசுந்தரா: பெரும்பாலானவர்கள் முகத்தை மட்டும் நன்கு பராமரித்து, கழுத்தை விட்டு விடுவர். கழுத்தைச் சுற்றியும், அதன் மடிப்புகளிலும் அதிக, 'பிக்மென்டேஷன்' இருக்கும்.

neck pigmentation treatment


கழுத்தை சுத்தமில்லாமல் வைத்திருப்பது, ஹார்மோன் மாற்றம், வெயிலில் அதிகம் செல்வது, மருந்துகளின் பக்க விளைவு, சர்க்கரை நோய், செயின் அணிவதால் அலர்ஜி, 'ஒபிசிட்டி' போன்றவை, இதற்கு காரணம்.கழுத்து கறுப்பு நீங்க, தேனுடன், எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சம அளவு சேர்த்து கழுத்தை சுற்றி தேய்த்து, 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

வாரத்தில் மூன்று நாள் இப்படி செய்தால், மாற்றம் தெரியும்.நான்கைந்து பாதாம்களை இரவு ஊற வைத்து, காலையில் கூழாக அரைத்து தேய்த்தும், வெள்ளரிக்காயை அரைத்து தேய்த்தும், கற்றாழை ஜெல் தேய்த்தும், நான்கு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன், பால் சம அளவு சேர்த்து கழுத்தில் தடவி, 20 நிமிடங்களில் கழுவலாம்.

ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸை சம அளவு எடுத்து, கழுத்தை சுற்றி தடவி, 20 நிமிடம் கழித்து, எண்ணெய் இல்லாமல் சுத்தமாக கழுவலாம்; இது நிச்சயம், நிரந்தர தீர்வு தரும்.மற்ற இடங்களை விட கழுத்தில், எண்ணெய் சுரப்பி குறைவாக இருப்பதாலும், தோல் லேசாக இருப்பதாலும், சீக்கிரமே சுருக்கமும், கோடுகளும் விழும். உடலில் அதிக சர்க்கரை இருந்தாலும், அதிக அளவில் புற ஊதா கதிர் படுவதால் கூட இது ஏற்படும்.

பொதுவாக, வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.கழுத்து கோடுகள் நீங்க, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன், கஸ்துாரி மஞ்சள் கால் டீஸ்பூன் சேர்த்து, 20 நிமிடம் கழித்து கழுவினால், கழுத்தில் கருமையையும் நீக்கும்.

நான்கு அவுன்ஸ் தேங்காய் எண்ணெயுடன் ஒரு அவுன்ஸ் ஆர்கன் ஆயில் சேர்த்து, இரவு படுக்கும் முன், விரல்களால் மசாஜ் செய்து அடுத்த நாள் கழுவலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சம அளவு கலந்து, ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம்.

எப்போதும் குனிந்தே போனை பார்த்துக் கொண்டிருப்பதால், உடலின் மொத்த எடையையும் கழுத்தில் போடுகிறோம். இதனால், கழுத்தில் பைன் லைன் மற்றும் சுருக்கங்களும் உருவாகின்றன.

அதனால், சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படுகிறது.மொபைல் போனை அளவாக பயன்படுத்துவதுடன், முடிந்தளவு கழுத்திற்கு, 'ஸ்டிரெஸ்' கொடுக்காமல் முகத்திற்கு நேரே வைத்து பயன்படுத்துவது நல்லது. கம்ப்யூட்டரிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்