கல்லீரல் நோய் பாதிப்பு கண்டறிய வழிகள்

மனித உடலில் மிக முக்கிய உறுப்பு கல்லீரல். அது உடலுக்கு உள்ளே இருந்து செய்யும் செயல் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு, கல்லீரலுக்கு அதிக வேலை கொடுத்து நாமாகவே கெடுத்துக்கொள்கிறோம்.

சிக்கலான அமைப்பு கொண்ட நம் உடலில் கல்லீரலின் பங்களிப்பு அபரிதமானது. உடலுக்குத் தேவையான மொத்த சக்தியும் கல்லீரலிடமிருந்துதான் பெறப்படுகிறது.

உண்ணும் உணவினை ஜீரணித்து, அதிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து, உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பும் வேலைச் செய்கிறது கல்லீரல். அதோடு இல்லாமல் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்றுகிறது.

அளவுக்கு அதிகமான உணவுகளை உண்டு கல்லீரலுக்கு அதன் சக்தியை மீறிய வேலையை கொடுக்கிறோம். அதனால் கல்லீரல் விரைவில் சோர்ந்து போகிறது. நாளடைவில் தாக்கு பிடிக்க முடியாமல் பாதிப்படைய ஆரம்பிக்கிறது.

கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு பரம்பரையாக வரலாம். குடும்பத்தில் யாருக்காவது கல்லீரல் பாதிப்பு இருந்தால் அவர்கள் மூலம் வரலாம்.

kalleeral pathippu arikurigal


கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்:

வயிறு உப்புசம்.

கல்லீரல் பாதிப்பு உள்ளானவர்களுக்கு அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்படும். சிலருக்கு நிரந்தரமாக வயிறு வீக்கத்துடன் காணப்படும். கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சியளிப்பர். கல்லீரல் இழை நார் வளர்ச்சியால் சிலருக்கு அடி வயிற்றில் நீர் கோர்த்துக்கொள்ளும்.

மஞ்சள் காமாலை 

சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறினால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அது கல்லீரலை வெகுவாக பாதிக்கும். சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதால், இரத்தத்தில் பிலிரூபின் உண்டாகும். அதனால் உடலில் இருக்கும் கழிவு வெளியேற முடியாது.

வயிற்று வலி 

வயிற்று வலி, அதுவும் மேல் வயிற்றின் வலது புறத்தில் வலி எடுக்கும் போது அல்லது விலா எலும்பு கூட்டின் அருகே அடி வயிற்று பகுதியின் வலது புறத்தில் வலி எடுத்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

சிறுநீரில் மாற்றங்கள்

உடலின் இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிக அளவில் இருந்தால், சிறுநீரகத்தின் நிறம் கடும் மஞ்சளாக மாறும். அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட கல்லீரலால், சிறுநீரகம் மூலம் கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை.

சரும எரிச்சல் 

சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு, அது தொடர்ந்து கொண்டே இருந்து, நாளடைவில் சொறி, சிரங்கு என மாறிவிட்டால் அதுவும் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான ஒரு அறிகுறியே.

மேலும் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை உடலால் கொடுக்க முடியாததால், அந்த இடங்களில் அரிப்பு ஏற்பட்டு திட்டுக்கள் உண்டாகும்.



மலம் கழிப்பதில் மாற்றங்கள்

கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் மலங்கழித்தலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், மலச்சிக்கல், மலங்கழித்தலின் போது எரிச்சல், மலத்தின் நிறம் மங்குதல் அல்லது மலத்தின் நிறம் கருமையாகுதல் அல்லது மலத்தில் இரத்த திட்டுக்கள் வருதல் போன்றவைகளை சொல்லலாம்.

குமட்டல்

செரிமான பிரச்சனை மற்றும் அமில எதிர்பாயல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிக்கப்படுவதனால் ஏற்படும். அதனால் குமட்டலும், வாந்தியும் கூட ஏற்படும். பசியின்மை கல்லீரல் பாதிப்பை கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் அது பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

அதனால் அளவுக்கு அதிகமாக உடல் எடை குறையும். ஊட்டச்சத்து குறைவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனே ஊட்டச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

நீர் தேங்குதல் 

கால், கணுக்கால், பாதம் போன்ற இடங்களில் நீர் தேங்கினால், அதனை நீர்க்கட்டு என்று கூறுவார்கள். இதற்கு காரணம் கல்லீரல் பாதிப்பு தான். அதுமட்டுமின்றி வீங்கிய பகுதிகளை அழுத்தினால், அழுத்திய தடம் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

சோர்வு

கடுமையான சோர்வு, தசை மற்றும் மன தளர்ச்சி, ஞாபக மறதி, குழப்பங்கள் மற்றும் கோமா போன்ற அறிகுறிகள் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும்.

Tags:Kalleeral Noi, Kalleeral Noi Arikurigal, Kalleeral Pathippu.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்