நிபா வைரஸ்: பாதிப்பை தடுப்பது எப்படி?

பன்றிக்காய்ச்சல, பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற பயமுறுத்தும் நோய்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தின. அந்த வகையில் தற்பொழுது வௌவால் மூலம் பரவும் வைரசால் காய்ச்சல் பரவி உயிரிழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

nipah virus kaichal


கேரளாவில் கோழிக்கோட்டில் வைரஸ் காய்ச்சல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக் காய்ச்சலுக்கு காரணம் நிபா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

உயிர் பறிக்கும் நோய் பரப்பும் நிபா வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது?


  • பழந்தின்னி வவ்வால்கள் கடிப்பதால் விலங்குகளுக்கு
  • விலங்குகளின் திரவங்கள் மூலம் மற்ற விலங்குகளுக்கு
  • பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்களை உண்ணும் மனிதர்களுக்கு
  • விலங்குகளின் திரவங்கள் மூலம் மனிதர்களுக்கு
  • மனிதர்களின் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கு


நிபா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?


  • விலங்குகள் மற்றும் பறவைகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது
  • வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்ர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்
  • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது முகமூடி மற்றும் கையுறை அணிய வேண்டும்.
  • பழந்தின்னி வவ்வால்கள் அதிகமுள்ள பகுதிகளில் கள் அருந்தக்கூடாது.


அடிப்படை ஆரோக்கிய வாழ்வியல் முறைகளைப் பின்பற்றினாலே இதுபோன்ற ஆபத்தான நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும். 

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்