சிறுநீரக நோயின் அறிகுறிகள்

எந்த நோயாக இருந்தாலும் அது நம் உடலில் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும்.

அவை எந்த நோயின் பாதிப்பாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதனால் அந்த நோயின் தீவிரத்தை எளிதில் குறைக்க முடியும்.

அந்த வகையில் சிறுநீரக நோயின் அறிகுறிகள் எப்படி தோன்றும் என்பதை பார்க்கலாம்.

சிறுநீரக நோயின் அறிகுறிகள்?

சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, எரித்ரோஃபோய்டின் எனும் ஹார்மோன் குறைவாக சுரக்கும். அதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வு நிலை உண்டாகும்.

சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும்.

சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம்.

கை அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், அது சிறுநீரக செயலிழப்பிற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால், ரத்தத்தில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் சில நாட்கள் தொடர்ந்து உடலில் ஒருவித அரிப்பு உண்டாகலாம்.

நம் உடலில் கழிவுகள் அதிகம் சேர்ந்தால், அது முகத்தில் வீக்கத்தை உண்டாக்கும். இது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் வெளியேறும்போது ஒரு வித சிரமம் ஏற்படுவது கூட சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.


சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். அதனால் சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.

குமட்டல் பிரச்சனை ஏற்படுவது கூட சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும். நச்சுக்கள் உடலில் தங்கி சிறுநீரக பாதிப்பை உண்டாக்கி, செயலிழப்பை அதிகப்படுத்தும்.

வலிப்பு நோயுடன், உடல் மற்றும் தலையில் கட்டுப்படுத்த முடியாத வகையில் வலிகள் இருந்தால் அதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்.

Tags: Kidney stone, Kidney Failure, Kidney Problems, Siruneeraga Noi Arigurigal

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்