அடி வயிற்று கொழுப்பை நீக்கும் உணவுகள்

இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக பெரிய தொல்லை இந்த கொலஸ்ட்ரால் தான். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டதாலும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி கொண்டே போனால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், என வரிசை கட்டி கொண்டு உங்களின் உடலில் காத்திருக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபட நாம் சாப்பிட கூடிய உணவுகளே போதும். எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் எளிதில் கொலஸ்ட்ராலை கரைக்க முடியும் என்பதை இனி பார்ப்போம்.

கொலெஸ்ட்ரோல்- பெரிய எதிரி..!

நமது உடலின் எதிரியாக கருதப்படுவதில் இந்த கொலஸ்ட்ராலும் ஒன்று. நாம் தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு கொண்டே போவதால் இவற்றின் அளவு அபரிமிதமாக கூடி விடுகிறது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகினால் உயிருக்கே கூட உலை வைக்க கூடும்.

பீன்ஸ்

பீன்ஸ் பல வகைகளில் கிடைக்கிறது. எந்த வகையாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. நீங்கள் தினமும் உங்களின் உணவில் பீன்ஸ் சேர்த்து கொண்டால் மிக எளிதில் குடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து விடலாம். மேலும், கெட்ட கொலெஸ்ட்ராலை உடலில் சேர விடாமலும் இது தடுக்கும்.

கிரீன் டீ

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ள கிரீன் டீயை தினமும் 1 கப் குடித்து வந்தாலே உடலில் கொலெஸ்ட்ரால்கள் சேராது. குறிப்பாக இதய நோய்களை தர கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலுமாக இது கரைத்து விடுகிறதாம்.

டார்க் சாக்லேட்

பல வகையான நன்மைகள் இந்த டார்க் சாக்லேட்டில் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது. தினமும் சிறிது டார்க் சாக்லேட் சாப்பிட்டால் குடலில் அடைந்துள்ள கொலெஸ்ட்ரால்கள் அனைத்துமே கரைந்து போய் விடும். மேலும், ஆரோக்கியமான இதயத்தையும் இது தரும்.


Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்