குழந்தைகளை சாப்பிட வைக்க சூப்பர் டிப்ஸ் !

உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம்.

உங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டு என்பது ஒரு கற்றல் போல தான். எனவே குழந்தைகள் தானாக சாப்பிட ஆரம்பிக்கும் நேரத்தில் அவர்கள் அதையும் ஒரு விளையாட்டை போல கையாளுவார்கள். இதன் மூலம் உணவுப் பொருளின் அளவு, வண்ணம், வடிவம், எடை போன்ற விஷயங்களை அவர்கள்  கற்றுக் கொள்வார்கள்.

குழந்தையை தானாக சாப்பிட வைப்பது என்றால் என்ன?


பொதுவாக குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நாம் திட உணவை கொடுக்க ஆரம்பித்து இருப்போம். ஆனால் அந்த உணவு வகைகள் எல்லாமே மசித்த பழங்கள், மசித்த காய்கறிகள், கஞ்சி வகைகள், கூழ் வகைகள் என்ற வடிவில் தான் இருக்கும்.

 திட உணவை கொடுத்தல் -(BLW-Baby Led Weaning)  என்றால், குழந்தைகளையே உணவை எடுத்து உண்ணுவதற்கு அனுமதிப்பது.

குழந்தைக்கு பசி ஏற்படும் போது உணவை கொடுத்து பழக்க வேண்டும். அப்போது தான் உணவை அவர்களாகவே எடுத்து சாப்பிடுவார்கள்.

ஆனால் குழந்தை தானாக சாப்பிடுவது என்பது கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனால் குழந்தைக்கு பசியின்மை பிரச்சினைகள் நீங்கி அவர்களுக்கு நன்றாக பசிக்கும் போது அவர்களாகவே உணவை எடுத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் .

குழந்தைகளுக்கு வித விதமான உணவை கொடுத்து பழக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தானாகவே உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள்.

குழந்தை தானாக சாப்பிட துவங்கும் முன் அவர்கள் கையில் உணவை வைத்து உருட்டியும் அங்கும் இங்கும் திருப்பியும் ஆராய்ச்சி செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்வதற்கு அனுமதியுங்கள். ஏனெனில் குழந்தைக்கு உணவு குறித்த புரிதல் ஏற்பட்ட பிறகு அவர்களாகவே உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகுவார்கள்.

ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை உணவை வாயில் வைத்து மெல்ல ஆரம்பிக்கும். உணவை வாயில் அங்கும் இங்கும் உருட்டிக் கொண்டு இருக்குமே தவிர உணவை விழுங்காது. இதனால் குழந்தை உணவை சாப்பிடவில்லையே என பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு. இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு உணவின் மீதான நாட்டம் ஏற்படும் போது அவர்களாகவே தங்கள் வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவார்கள்…

சில நேரங்களில் குழந்தை  சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவை வாயில் வைத்த உடனே அப்படியே அதனை விழுங்கி விடும். அதனை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்.

உணவை  மென்று சாப்பிடுவதற்கு கற்று கொள்ளும் வரை குழந்தை உணவை விழுங்கிக் கொண்டு தான் இருக்கும்.   நாளாக ஆக குழந்தை உணவை விழுங்காமல் ரசித்து சாப்பிட பழகி விடும். அதன்பிறகு குழந்தையின் வயிறு நிரம்பும் வரை சாப்பிட பழகி இருக்கும்.

என் குழந்தை தானாக சாப்பிட பழகி விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?
1. குழந்தை தானாக உட்காரும் நிலைக்கு வரும் போது
2. உணவை கொடுக்கும் போது அது நாக்கால் அதனை வெளியே உந்தித் தள்ளாமல் இருக்கும் போது
3. குழந்தை தன் கைகளால் பொருட்களை எடுத்து அதனை வாய்க்கு கொண்டு போகும் போது
4. பொம்மைகளை வாயில் வைத்து சப்பிக் கொண்டிருக்கும் போதும், வாயை மென்று கொண்டிருப்பது போல் செய்கைகள் செய்யும் போது உங்கள் குழந்தை தானாக சாப்பிட தயாராகி விட்டது என்று அர்த்தம்.

குழந்தையை எப்படி தானாக சாப்பிட வைப்பது ?
1. குழந்தை தானாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்களை உயரமான நாற்காலியில் அமர வைத்து சாப்பிட பழக்குங்கள். இதன் மூலம், எளிதில் சுத்தம் செய்யலாம். ஏனென்றால் குழந்தை உணவை நிறைய சிந்தி மற்றும் விளையாடிக் கொண்டே சாப்பிடும்.

2. என்ன வகையான உணவுகளை குழந்தைக்கு தரலாம் ?
kulandai

நம் வீட்டில் நாம் என்ன உணவுகளை சாப்பிடுகிறோமோ அதை எல்லாம் தாராளமாக குழந்தைக்கும் கொடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தன்மை ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும் என்பதால் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது.

வேக வைத்த காய்கறிகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.
பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுங்கள் (ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழ வகைகளை நீங்கள் தரலாம்)
அரிசியினால் செய்யப்பட்ட உணவு வகைகள், உணவுப் பொருட்கள் வைத்து நிரப்பிய  ஸ்பூன்களையும் குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிட பழக்குங்கள்.
3. உணவு சிந்துவதை சுத்தம் செய்வதற்க்கு  தயாராக இருங்கள்.

4. குழந்தை தானாக சாப்பிடும் போது உடனே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய அவசியம் இனி இல்லை என நினைத்து விலக வேண்டாம். இந்த விஷயத்தில் குழந்தைகளை பெற்றோர் உரிய முறையில் வழிநடத்த வேண்டியது முக்கியம். கைகளில் உணவை எடுத்து வாய்க்கு கொண்டு போகும் வரை குழந்தைக்கு பெற்றோர்கள் தான் கற்றுத் தர வேண்டும்.

5. உங்கள் குழந்தைக்கு ஒரு நேரத்தில் ஒரு வித உணவை மட்டும் சாப்பிட கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு நாள் ஆப்பிள் கொடுக்கும் போது மற்றொரு நாள் பேரிக்காயை கொடுங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் குழந்தைக்கு கொடுக்கும் போது அதன் சுவை குழந்தைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை இரண்டு வகையான உணவையும் தவிர்த்து விடும்.

6. பாஸ்ட் ஃபுட் வகைகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

7. குழந்தைகள் இந்த நேரத்தில் சாப்பிட்டே ஆக வேண்டும் என கட்டாய படுத்தாதீர்கள்.  குழந்தை பசியாக இருக்கும் போது உணவை கொடுத்து பழக்குங்கள். குழந்தை கைகளால் உணவை சாப்பிட்டாலும் இடையில் தாய்ப்பாலையும் கண்டிப்பாக கொடுங்கள்.

8. குழந்தைகளுக்கு சாப்பிட உணவை கொடுக்கும் போது சின்ன சின்னதாய் வெட்டித் தர வேண்டாம். ஏனெனில் குழந்தை முதன்முறையாக தானாக சாப்பிட முயற்சிக்கும் போது அவர்களால் உணவை  கைகளால் எடுக்க வராது.கைகளால் பிடித்து சாப்பிடும் அளவிற்கு 2 இன்ச் நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொடுங்கள்

9. சாப்பிடும் விஷயத்தில் குழந்தைகளை எப்போதும் அவசரப் படுத்தாதீர்கள். குழந்தை கையில் எடுத்த உணவு முழுவதையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைத்து அவர்களை வற்புறுத்தாதீர்கள். இந்த விஷயத்தில் பொறுமை காக்க வேண்டியது அவசியமானது…

10. குழந்தைகள்  தவிர்க்கும் உணவுகளை சில நாட்கள் கழித்து சாப்பிட ஆரம்பிக்கலாம். எனவே அவர்களுக்கு பிடிக்காமல் போகும் உணவுகளை சில நாட்கள் கழித்து சாப்பிட கொடுங்கள்.

11. சாப்பிடும் போது சில குழந்தைகளுக்கு உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படலாம். எனவே குழந்தை தனியாக சாப்பிட அனுமதிக்காதீர்கள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவர்கள் கூடவே இருக்க வேண்டும்.

குழந்தைகள் தானாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் இருக்கிறது ?

1. குழந்தைகள் விதவிதமான உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவுப் பொருளின் வண்ணங்கள், வடிவம் மற்றும் சுவையை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். இதற்கு உங்கள் குழந்தையை நீங்கள் அனுமதியுங்கள்.

2. குழந்தைக்கு கண் மற்றும் கைகளுக்கு இடையே உள்ள தொடர்பு நன்கு வளர்ச்சியடையும்.

3. குழந்தைக்கு சிறுவயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடும் பழக்கம் உருவாகும்.

4. இதனை குழந்தைகள் ரசித்து செய்யக் கூடிய விஷயமாக மாறிவிடும்.

5. தானாக சாப்பிட முயற்சி செய்யும் குழந்தைகள் பொதுவாக புதுப்புது உணவு வகைகளை சாப்பிட முனைப்பாக இருக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு அதன் சுவை பிடித்துப் போய் உணவை தவிர்க்காமல் பசியின் போது உரிய நேரத்தில் சாப்பிட பழகுவார்கள்.

6. குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட போராடாமல் மற்றும் சாப்பிடாமல் அடம் பிடிக்கும்  அவர்களின் உணவு நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற இது உதவியாக இருக்கும்.

7. குழந்தைகள் தானாக சாப்பிடும் போது அதனை மற்றவர்களுக்கும் கொடுத்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் குழந்தைக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை வளரும்.  ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் கற்றுக் கொடுங்கள்.

குழந்தைகள் தானாக உணவை சாப்பிடுவதில் என்னென்ன குறைகள் இருக்கிறது?

குழந்தைகள் தானாக உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் அவர்களுக்கு கிடைத்ததா ? என்பது குறித்து நமக்கு தெரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நாம் குழந்தைகளுக்கான உணவை கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான சத்துகள் நிரம்பிய உணவை கொடுத்து விடுவோம். ஆனால் குழந்தை தானாக சாப்பிடும் போது குறைவான அளவே சாப்பிடும் என்பதால் அவர்களுக்கு அந்த சத்துகள் கிடைக்குமா என்ற கேள்வி எழும். ஆனால் பல்வேறு விதமான சத்துகள் நிரம்பிய உணவை அவர்களுக்கு வரிசையாக கொடுத்து வரும் போது இந்த பிரச்சினையை தவிர்க்கலாம்…

நன்றி: மை லிட்டில் மொப்பட்

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்