குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறை

 குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஆரோக்கியமான விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியது  அவசியம்.

குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே.

உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இதற்கு பதிலாக அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.

அதேபோல், பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது கிடையாது. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான  வேதிப் பொருட்களை வெளியிடும். எனவே எவர்சில்வரில் செய்யப்பட்ட டிபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும்  கிடைக்கின்றன.

பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கும்தான். அவை  குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குழந்தைகளுக்கு காலை உணவுவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும்.

குழந்தைகளுக்கு நொறுக்குதீனிற்க்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது  அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்