வியாதிகள் குறித்து தெரிந்துகொள்ள வெப்சைட் !

சில நோய்களின் அறிகுறிகள் சாதாரணமாக இருக்கும். அதைப் பற்றிய எச்சரிக்கை யாருக்கும் இருக்காது. பரபரப்பான உலகில் இயங்கி கொண்டிருக்கும் நமது உடலை பற்றிய அக்கறை அதிகம் இருப்பதில்லை. சாதாரண தலைவலி என்றால் கூட மருந்தகத்தில் அதற்கென உள்ள மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு சர்வ சாதாரணமாக அந்த நாளை கடத்தி விடுகிறோம்.

உண்மையில் அதுபோன்று செய்வது அபத்தமானது, நமது உடலுக்கு சில பக்க விளைவுகளை  ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட நேரமின்மை காரணமாக அவ்வாறு செய்து விடுகிறோம்.

இதனால் என்ன பெரிதாக ஆகிவிடும் என்ற அசட்டைதான் அதற்கு முக்கிய காரணம்.

உடலில் சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு வரப்போகிற நோய் பற்றி முன்னறிவிப்பு செய்ய உடல் எப்பொழுதும் மறந்த்தில்லை. ஆனால் நாம்தான் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.

அப்படி தென்படுகிற அறிகுறிகளை வைத்து உங்களுக்கு எந்த நோய் வரலாம், எதற்கான அறிகுறிகள் என்பதை ஒரு இணையதளம் வழங்குகிறது.

அந்த இணையத்தளத்தின் மூலம் உங்கள் உடல் உபாதைகளை குறிப்பிட்டு தேடினால், எந்த நோய்க்கான அறிகுறிகள் அவைகள் என தெரிந்துகொள்ளலாம்.

இதன் மூலம் நோய்கள் பற்றிய தேவையில்லாத பயத்தை போக்கலாம். !

மேலும் இதில் உள்ள டூல்களைப் பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பிரச்னைகளுக்கு தீர்வுகளை பெற முடியும்.

உதாரணமாக BMR Calculator என்ற டூல் மூலம் உங்களது எடை, வயது, நீங்கள் செய்து கொண்டிருக்கும் உடற்பயிற்சி போன்றவற்றை உள்ளிட்டு , நீங்கள் மேலும் செய்ய வேண்டியவைகளை பற்றிய குறிப்புகளை பெறலாம்.

உடல்நலம் பற்றிய உபாதைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை தெரிந்துகொள்ள இவ்விணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள சுட்டி: https://www.medhelp.org/health_tools#/calculators

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்