மழைக்கால சளி தீர இயற்கை வைத்தியம் !

சளி தொல்லை பிடித்தது. எப்பொழுது தும்மல் வரும்? எப்பொழுது இருமல் வரும்? எப்பொழுது தலைவலிக்கும் என தெரியாது. நேரங்காலம் பார்த்தெல்லாம் இது வருவதில்லை. பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்திருந்தால், தும்மல் மூலம் காற்று வழியாக கிருமிகள் பரவி வந்து உங்களையுந் தொற்றிக்கொள்ளும்.


பாடாய் போன சளித்தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?


இதோ அதற்கான சரியான வைத்தியம் உள்ளது. இதைப் பின்பற்றினால் குணம் நிச்சயம். என்ன ஏதென்று பார்ப்போமா?

இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து குணப்படுத்தலாம்.

1. 2 டீஸ்பூன் இஞ்சி சாறு, 2 டீஸ்பூன் தேன் இந்த இரண்டை கலந்து மூன்று வேலை குடித்துப் பாருங்கள். 2, 3 நாட்களுக்கு இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் உங்களை பிடித்த சளி போயே போச்சு.

2. கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் சுக்குத்தூள் கலந்து குடிச்சிப் பாருங்க. சளிக்கு இதமா இருக்கிறதோட, சீக்கிரமாகவே குணமாகிடும்.

3. 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலே போதும். அப்புறம் கண்டிப்பா சளி உங்களை நெருங்கவே நெருங்காது.

4. வல்லாரை சூரணம்நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகிவிடும்.

5. இது எல்லோருக்கும் தெரிந்த்துதான். கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சளிக்கு சனியன் பிடித்து ஓடிவிடும்.

6. கற்பூரவள்ளி - இந்த இலைச்சாற்றை அப்படியே குடிக்க சளி சரண்டர் ஆகிடும்.

7. சின்ன வெங்காயம், தேன், இஞ்சிசாறு இதை மூன்றையும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால சளி உடனே குணமாகும்.

8, மிளகோட தேன் கலந்து சாப்பிட்டுப் பாருங்க. 3 நாள்ல சளி சரியாகிடும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்