அரை அடி கூந்தலை ஆறடியாக வளர செய்யும் முதியார் கூந்தல் தைலம் செய்வது எப்படி? - Mudi valar mudhiyaar koondhal thailam

கூந்தல் பராமரிப்பில் நம் தமிழர்கள் அந்த காலத்திலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருந்தனர். ஆறடி கூந்தல் என்று சும்மாவா சொன்னார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் நடந்து போனால் அந்த கூந்தல் வீதியை கூட்டி செல்லுமாம். அந்தளவிற்கு நீண்ட கூந்தலினைப் பெற்றிருந்தார்கள். அதை பராமரிப்பு அவ்வளவு சுலமானதாக அவர்களுக்கு இருந்ததிருந்த்து. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ஆறடி கூந்தலை அரை அடி கூந்தலாக மாற்றிக் கொண்டுவிட்டனர். காரணம் பராமரிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை. அல்லது அது பெரிய வேலையாக போய்விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். 

சரி, கூந்தல் வளர, அடர்த்தியுடன் இருக்க "முதியார் கூந்தல் தைலம் செய்வது எப்படி?" என பார்ப்போம். 

mudi valara thailam

முதியார் கூந்தல் தைலம் செய்வது எப்படி 

முதியார் கூந்தலின் வேறு பெயர்கள்

அவ்வையார் கூந்தல், குதிரைவாலி, அம்மையார் கூந்தல், மிரியார் கூந்தல் மற்றும்  சரண்.

முடி தைலம் செய்ய தேவையான மூலிகைகள்

முதியார்கூந்தல் 150கிராம்
கற்றாழை சோறு 150கிராம்
வெந்தயம் 300கிராம்
செம்பரத்தை பூ 80

mudi valara

முதியார் கூந்தல் தைலம் செய்முறை

முதலில் முதியார்கூந்தலை பொடியாக நறுக்கி சோற்று கத்தாழை சோறுடன் கலந்து இடித்து வெந்தயத்தை போட்டு பிசைந்து ஒருசட்டியில்போட்டு மேல் தட்டு மூடி குளிர்ச்சியான இடத்தில் ஐந்து நாள் வைக்க வெந்தயம் முளை விட்டு இருக்கும் அதை ஒரு ஜாடியில் போட்டு அதில் 150 கிராம் நல்லெண்ணை விட்டு அதில் செம்பரத்தை பூ 80 எடுத்து வந்து அதன் இதழ்காளை ஜாடியில் போட்டு கலக்கி 30 நாள் வெய்யிலில் வைத்து எடுக்கவும்.

koondal paramarippu

முதியார் கூந்தல் தைலம் பயன்கள்

உஷ்ணத்தினால் தலையில் உண்டாகும் வலி நீங்கும், கூந்தல் உதிருதல் நீங்கி முடி செழுமையாக வளரும், புழு வெட்டினால் முடி உதிர்ந்த இடத்தில் தடவிவர புதிதாக முடி முளைக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

இப்படி முதியார் கூந்தல் தைலம் செய்து நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குப் பயன்படுத்தி அவர்களை அந்தக் காலப் பெண்கள் போல, ஆறடி கூந்தலும், அருமையான வளமுள்ள வீட்டையும் உருவாக்குங்கள். நன்றி. வணக்கம்.


Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்