கலிகாலத்தில் தீமை செய்பவன் இலகுவாக உயர்வது ஏன்..?

themai seibavan munneruvathu eppadi

தள்ளி நிற்பவர்களை இறைவன் கண்டுகொள்வதில்லை, என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை. இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால் எளிதான பாதிப்பு வரும். சற்றே வேகமான வாகனத்திலிருந்து விழுந்தால் கொஞ்சம் பலமான பாதிப்பு வரும்.

ஆனால் உயரமான இடத்திலிருந்து விழுந்தால், உயிருக்கே அபாயம் தான். அது போல் தான், கெடுதல் செய்பவர்கள், பகவானை துதிப்பது போல் நாடகமாடி பெரும் பொருள் சம்பாதித்தாலும், மிக விரைவில் அவர் உயரத்திலிருந்து விழப்போகிறார் என்று அர்த்தம். இறைவன் அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான பாதிப்பை கொடுக்காமல், உயரமான இடத்திற்கு ஏற்றிக்கொண்டிருக்கிறார் என்பது, சித்தர்களுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும் மட்டும்தான் தெரியும்.

மூன்று உலகத்தையும் ஆண்ட ராவணனுக்கு, ஒரு சாதாரணப் பெண்ணான, பதிவிரதையான சீதாபிராட்டியால் அழிவு ஏற்பட்டதைத்தான் சுந்தரகாண்டம் எடுத்துக்காட்டுகிறது, என்கிற முக்கியமான செய்தியை, இவ்வுலக மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்" கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம்.

இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவேண்டும். ஒருநாள் போய்விட்டால், வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே, ஒவ்வொரு தினமும் கழியும் போதும், அன்றைய தினத்தில், நாம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது?

எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம், உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால், எண்ணங்களால், பொருட்களால், மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து, சிந்தித்து, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, கூடவே, இறையருளும், எமது ஆசியும் தொடரும்.

இறை காத்திருக்கிறது. ஆனால், இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும், அது இன்பமோ, துன்பமோ, ஒரு மாய வலைதான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும்போது, "எனக்கு உன்னை தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீதான் வேண்டும்" என்று, உளமார ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே, அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஒடத் துவங்கும்.

பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது. தேவைகளுக்காக இறைவனை அணுகினால், கடைசிவரை ஒரு தேவை போக, இன்னொரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். தேவைகளுக்காக வழிபாடு என்பதை விட, ஒரு மனிதன் இறை மறுப்புக் கொள்கையிலேயே இருந்து விடலாம்.




Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்