தலையில் பொடுகு வந்து வரட்டு வரட்டு என சொரிந்து கொள்கிறீர்களா? என்ன செய்தாலும் பொடுகு போகாமல் தலையில் செதில் செதிலாக கொட்டுகிறதா? இதோ தீர்வு !!!!

இன்று இளைஞர்கள் முதல் இளைஞிகள் வரை அனைவருக்கும் இருப்பு பொடுகு தொல்லை. அதுவும் வெயில் காலத்தில் என்றால் சொல்லவே தேவையில்லை. அதிக வியர்க்குரு மற்றும் உடல் வெப்பம் காரணமாக தலையில் போதிய எண்ணைய் தன்மை இல்லையாமல் பொடுகு தோன்ற ஆரம்பிக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதிகம் வெளியில் சென்று வருவதால் அவர்களின் தலையில் வியர்க்குரு மற்றும் தூசி துப்புகள் அண்டி, ஒரு மெழுகு போன்ற லேயரை தலையில் உருவாக்கிவிடும். 

நாளடைவில் அது பொடுகாக தோன்றி அரிப்பு எடுக்க ஆரம்பிக்கும். குறிப்பிட்ட வகை ஷேம்புகள் பயன்படுத்துவதால் கூட தலையில் பொடுகு தோன்றுவதற்கு வித்திடும். சரி, பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? இயற்கை முறையில் அதற்கு தீர்வு என்ன என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். 
podugu thollai neenga


 பொடுகு, பேன், புழு வெட்டு, நமைச்சல், உடல் உஷ்னம் தீர மருத்துவம் 

அருகம்புல் தைலம்

அருகம்புல் சார் அரை லீட்டர்
கிழாநெல்லி சமுலம் 100 கிராம்
வில்வ இலை 100 கிராம்
அதிமதுரம் 30 கிராம்
கருஞ்சீரகம் 10 கிராம்
இவற்றை தேங்காய் என்னையில் கலந்து காய்ச்சி வடித்து சனிக்கிழமை அன்று தலைக்கு தேய்த்து குளித்து வரவும்

அருகம்புல் தைலம் பயன்

அருகம் புல் தைலம் குணமாக்கும் நோய்கள் பொடுகு, புழு வெட்டு, நமைச்சல், உடல் உஷ்னம், சொரி, சிரங்கு, பித்தம் முதலியவைகள் தீரும்.

podugu neenga iyarkkai vaithiyam

பொடுகு தொல்லை நீங்க கசகசா பேஸ்ட்

  1. கசகசா
  2. தேங்காய் பால்

கசகசா பேஸ்ட் செய்முறை

கசகசாவை தேங்காய் பால் விட்டு அரைத்து தலையில் பூசி ஊர வைத்து இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகு தொல்லை தீரும்.

பொடுகு நீங்க எலுமிச்சை பேஸ்ட்

வெள்ளை மிளகை தூள் செய்து பசும்பாலில் கலந்து சிறிது நேரம் கழித்து குளிக்க பொடுகு நீங்கும்

பேன் பொடுகு நீங்க சித்த மருத்துவம் 

  1. வெள்ளைப்பூண்டு 25 கிராம்
  2. எலுமிச்சை 1

எலுமிச்சை பேஸ்ட் செய்முறை

வெள்ளைப் பூண்டு எடுத்து 10 மில்லி எலுமிச்சை சார் விட்டு அரைத்து தலையில் தடவி வந்தால் பேன் தொல்லை ஒழியும் முடியும் நீண்டு வளரும்.

pen thollai neenga iyarkkai vaithiyam

பொடுகு நீங்க வேப்பம் பூ தைலம்

  1. பொடுகு முற்றிலும் நீங்க
  2. வேப்பம்பூ 10 கிராம்
  3. எலுமிச்சை இலை 10 கிராம்
  4. வெல்லம் 5 கிராம்
  5. நல்லெண்ணை -100 மில்லி

வேப்பம் பூ தைலம் செய்முறை

மேற் கூறியவற்றை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தைல பதம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு, தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க பொடுகு அறவே தீரும்.

இதையெல்லாம் செய்தால் பொடுகு தொல்லை அறவே நீங்கும். தலையை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்