Diet Chart: ஏழே நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட்!


ஏழே நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட் குறித்த சிறப்பு தொகுப்பு!

Diet Chart: ஏழே நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் ஜி.எம் டயட்!
ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் எடை குறைப்பதற்காக, ஆராய்ந்து கண்டுபிடித்த டயட்தான் ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள்.


மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். ஒரு கோர்ஸை ஏழு நாட்களுக்குப் பின்பற்ற வேண்டும்.இதன்மூலம், அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை குறைத்து, ஸ்லிம் ஆக முடியும். சருமம் பொலிவு பெறும்... நச்சுக்கள் நீங்கும். இந்த டயட்டைப் பின்பற்றும் முன் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனிடம்உங்கள் வழக்கமான உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை போன்றவற்றை ஆலோசித்து மேற்கொள்வது சிறந்தப் பலனைத் தரும்.


முதல் நாள் : பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது.தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது.தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அவசியம் அருந்த வேண்டும்.

weightloss diet in 7 days 7 kg
weightloss diet in 7 days 7 kg 


இரண்டாம் நாள் : முதல் நாள் பழங்களாகச் சாப்பிட்டதில் உடல் சற்று சோர்ந்திருக்கும். எனவே, உடலுக்குப் போதிய எனர்ஜி கிடைக்கவேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு உடலில் சேரும்.

பின் காய்கறிகளைப் பச்சையாகவோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். கீரைகளையும் வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து அதிகமாக சாப்பிடலாம். தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அவசியம் அருந்த வேண்டும்.

மூன்றாம் நாள் : முதல் இரண்டு நாட்கள் உண்ட காய்கறிகளில் உருளைக்கிழங்கைத் தவிர மற்றவற்றையும் பழங்களையும் கீரைகளையும் சாப்பிடலாம். காய்கறி, பழங்களை சாலட் செய்து சாப்பிடலாம்.வாழைப் பழத்தை இன்றும் தவிர்க்க வேண்டும். தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அருந்த வேண்டும்.

நான்காம் நாள் : ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை தலா மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். கடந்த மூன்று நாட்களாக ஜி.எம் டயட் பின்பற்றி இருப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்திருக்கும், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். பால் மற்றும் வாழைப்பழத்துடன்தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப்செய்து குடிக்கலாம். தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அருந்த வேண்டும்.

ஐந்தாம் நாள் : முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம் அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். ஐந்தாம் நாளில் தக்காளி அவசியம் இருக்க வேண்டும். மேலும், வேகவைத்த சிக்கன்அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் 10 -12 கிளாஸ் அருந்த வேண்டும்.

ஆறாம் நாள் : ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிர் சாப்பிடலாம். மேலும், சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸ் ஆகியவற்றைச் சாப்பிடலாம். இதனோடு இதர காய்கறிகளையும் சாப்பிடலாம். ஆனால், தக்காளியைச் சேர்க்கக் கூடாது. சூப் குடிக்கலாம். தண்ணீர் 10-12 கிளாஸ் அருந்த வேண்டும்.

ஏழாம் நாள் : ஏழாவது நாளை விருந்து என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளை அரிசி அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முடிந்தவரை சாதத்தைக் குறைத்துக்கொண்டு காய்கறிகள், பழங்களை உண்பது மிகவும் நல்லது. தண்ணீர் 10 -12 கிளாஸ் அருந்த வேண்டும். விரும்பினால் ஜூஸ் பருகலாம்.பின் குறிப்பு : ஏழாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபிகுடிக்கக் கூடாது. பிளாக் டீ, பிளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ்

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். களைப்பாக இருந்தால் போதிய ஓய்வு எடுத்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஒரு அங்கம். எனவே, தினமும் குறைந்தது 10,000 அடி அல்லது 3 கி.மீ தூரம் நடப்பது. அரை மணி நேரம் நீந்துவது, சைக்கிளிங் போவது போன்ற கார்டியோ பயிற்சிகளைச் செய்யலாம்.

ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். உங்களின் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். அளவுக்கு அதிகமான சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்