இப்படி ஒரு வத்தக் குழம்பா? வெறும் 4 பொருள் போதுங்க ! காரசாரமா சூப்பரா இருக்கும் !

milagu thakkali vatha kulambuவத்தக்குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு அருமையான குழம்பு வகை. வெள்ளைக் கார ர்கள் கூட இந்தியா வந்தால் இதை விரும்பு சாப்பிட்டு, காரசாரமாக மூக்கை சிந்திவிட்டு Awesome Taste என்று கூறி பாராட்டிவிட்டு செல்வார்கள். அதையும் இப்படி செய்தால், நிச்சயமாக வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர். மிக எளிதாக கிடைக்கும் "மணத்தக்காளி" வத்தல் வைத்தே அருமையான வத்தக் குழம்பு செய்திடலாம்.




தேவையான பொருட்கள்


  • மணத்தக்காளி வத்தல் - 2 டீஸ்பூன்
  • பூண்டு - 10
  • சின்ன வெங்காயம்- 1 கப்
  • தக்காளி - 1
  • வெல்லம் - 1 தேக்கரண்டி
  • புளி கரைசல்- 1 கப்
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  • கல் உப்பு - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1 கப்

செய்முறை

1. முதலில், புளி தண்ணீர் உடன் மிளகாய் தூள் கலந்து வைக்கவும்.

2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

3. பின் சிறிது மணத்தக்காளி வத்தல்,சி
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

4. சிறிது மஞ்சள் தூள், தக்காளி மற்றும் கல் உப்பு சேர்த்து வதக்கவும்.

5. புளி மற்றும் மிளகாய் தூள் கலவையை ஊற்றி ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

6. அதை கொதிக்க விடவும், குழம்பு ஒரு கொதி வந்ததும், ஒரு டீஸ்பூன் தூள் வெல்லம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

8. மணத்தக்காளி வதல் குழம்பு தயார். 

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்